உஷார்... Jumped Deposit Scam!
இதுதான் இப்போது லேட்டஸ்ட் மோசடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.ஜிபே, பேடிஎம்... என யுபிஐ வழியாக பணப்பரிவர்த்தனை செய்யும் சகலரும் இதில் சிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அதாவது ஏமாற்ற திட்டமிடும் நபர்கள் முதலில் ஓர் எண்ணுக்கு ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை குறைவான தொகையை யுபிஐ மூலம் டிரான்ஸ்ஃபர் செய்வார்கள். இத்தொகையைப் பெற்ற நபர் இதுகுறித்த குழப்பத்தில் இருக்கும்போதே, அந்த நபருக்கு யுபிஐ ஆப்பில் பெரிய தொகைக்கான ரிக்ெவஸ்ட் வரும்.
‘நமக்கு இந்தத் தொகை வரவில்லையே...’ என்று பதற்றத்தில் அந்த நபர் பேங்க் பேலன்ஸை செக் செய்வார். அப்போது அவர் போடும் பின் நம்பர் இந்தப் பண ரிக்வெஸ்ட்டை ஓகே செய்துவிடும். அவ்வளவுதான். கணக்கில் இருக்கும் பணம் அம்பேல்.
இதிலிருந்து தப்பிப்பது சிம்பிள். தெரியாத நபரிடமிருந்து சின்ன தொகை வந்தாலும், அடுத்த அரைமணி நேரத்துக்கு யுபிஐ வழியாக பேலன்ஸ் செக் செய்யாதீர்கள். ஒருவேளை தொகை வந்தவுடனே பின் நம்பர் போடுகிறீர்கள் என்றால் வேண்டுமென்றே தவறான பின்னை பதிவிடுங்கள்.இந்த இரண்டில் எது செய்தாலும் பண ரிக்வெஸ்ட் ரத்தாகும்.
காம்ஸ் பாப்பா
|