மதம் மாறுகிறார் கீர்த்தி சுரேஷ்?
அப்பாடா... கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என அடிக்கடி தகவல் வெளியாகி வந்த நிலையில் அதுக்கு எல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தானும், ஆண்டனி தட்டிலும் 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டார் கீர்த்தி. தனது வருங்கால கணவர் குறித்த அறிவிப்பை அவரது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தத்திற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்து திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாவது இது முதல் முறையல்லை. ஏற்கனவே, கேரளாவைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்திகள் வெளியாகின.
அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் ஆண்டனிக்கு சொந்த ஊரான கொச்சி யில் அவருக்கு சொந்தமான ரிசார்ட்ஸ் உள்ளன. இந்த இளம் ஜோடி திருமணம் வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹபீப் ஃபீரூக் என்பவருடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக ஆண்டனி இருக்கிறாராம்.
ஆண்டனிக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.இருவரது திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் உள்ள தேவாலயத்தில், கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி, கிறிஸ்தவ பாரம்பரியத்தை பின்பற்றி நடைபெற உள்ளதாம். கீர்த்தி சுரேஷ் இந்து பின்னணியில் இருந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனில் திருமணத்துக்காக அவர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவாரா அல்லது கேரளாவில் இந்து மதத்தின்படி திருமண விழாவையும் நடத்துவாரா?பொறுத்திருந்தால் பதில் கிடைக்கும்!
காம்ஸ் பாப்பா
|