அல்லு விட்டுடுச்சு!



‘ஜவான்’ என்ற ஒரே படம்தான். இந்தி(ய) சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் நம்மூர் அட்லீ.1000 கோடி வசூல் செய்த படம் என்பதால், அட்லீயை வளைத்துப் போட ஏகப்பட்ட முயற்சிகள். 
அதில் அட்லீ - அல்லு இணைய இருக்கும் படம் நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதற்கேற்ப இருவரும் சந்தித்தனர். அட்லீ ஒரு கதையைச் சொல்ல, அது அல்லுக்கு பிடித்துப் போனது. சேர்ந்து பண்ணலாம் என முடிவாகி இருந்த நிலையில், இப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு என்கிறார்கள்.

காரணம், அட்லீ கேட்ட சம்பளம்!  இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லீ இடம்பிடிக்க நானா கிடைத்தேன் என்று அல்லு தரப்பில் பெரும் வருத்தமாம். இதனால் வேறு தயாரிப்பாளர் கிடைப்பார்களா என்று அல்லு தரப்பில் தேடியிருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே அட்லீ கேட்ட சம்பளத்தைக் கேட்டு அரண்டு போய் முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.இதனால் அல்லு - அட்லீ இணையவிருந்த படம் அந்தரத்தில் தொங்குவதாகக் கிசுகிசுக்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா