அஜித்துடன் ப்ரியா!
அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் இப்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இப்படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார்.
மிலன், அஜித்தின் ப்ரியத்திற்குரிய கலை இயக்குநர். அஜித்தின் பல படங்களுக்கு இவர்தான் கலை இயக்குநர். மிலனின் மறைவு ‘விடாமுயற்சி’ படக்குழுவிற்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், இப்போதைய சூழலில் அவர்கள் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்தே ஆகவேண்டிய கட்டாயம். அதனால் ஷூட்டிங்கை தொடர்கிறார்கள்.
இங்கு இப்போது அதிரடி ஆக்ஷன் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். சமீபத்தில்தான் ரெஜினா கஸாண்ட்ரா, ‘விடாமுயற்சி’யில் நடிக்கிறார் என்ற ஒரு கிசுகிசு கிளம்பியது. இந்நிலையில் அஜித்துடன் ப்ரியா பவானி சங்கரும் நடிக்கஇருக்கிறார்.
இவருடைய காட்சிகள் அசர்பைஜானில் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் ப்ரியா பவானி சங்கர் உடனடியாக அசர்பைஜானுக்கு பறந்திருக்கிறார் என்கிறார்கள்.படத்தில் ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் என இரண்டு இளம் கதாநாயகிகள் இருந்தாலும், அஜித்தின் முக்கிய ஜோடி சீனியர் த்ரிஷாதானாம்!
காம்ஸ் பாப்பா
|