நான் சிங்கிள்தான்!
இப்படிச் சொல்பவர் மிருணாள் தாக்கூர்.அதே... அதே... துல்கர் சல்மானுடன் ’சீதா ராமம்’ படத்தில் நடித்தாரே... அவரேதான். ‘சீதா ராமம்’ பெரும் வெற்றியைப் பெற்ற பிறகும் கூட, ஆறேழு மாதங்களாக வேறெந்த படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகாமல் இருந்தார்.  நல்ல கதை அமையவில்லை, அதனால் எந்தப் படத்திலும் நான் நடிக்கவில்லை என்று சொன்னவர் இப்போது தெலுங்கு நடிகர் நானியுடன் ‘நானா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து சூர்யாவுடனும் நடிக்க இருக்கிறாராம். இந்நிலையில் நானியுடன் நடித்திருக்கும் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இணைய வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பி இருக்கிறார் மிருணாள் தாக்கூர்.மிருணாள் இப்படிச் செய்யலாமா என இணையத்தில் பஞ்சாயத்து நடந்து வருகிறது. ஆனால், எதையும் கண்டுகொள்ளாத மிருணாள் தாக்கூர், ‘நான் இன்னும் சிங்கிள்தான்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
இப்படிச் சொல்வது எல்லாம் இளவட்ட ரசிகர்களைத் தன்வசம் வளைத்துப் போடுவதற்குத்தான். தன்னுடைய புரமோஷன் வேலைகளை நன்றாகவே செய்து வருகிறார் என்கிறார்கள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... மிருணாள் தாக்கூருக்கு இப்போது வயது 31.
காம்ஸ் பாப்பா
|