விடாமுயற்சியில் இரண்டு அஜித்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே மூண்டிருக்கும் போரினால், அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் பாதிக்கப்படுமா என்ற பரபரப்பு அப்படக்குழுவினரிடையே இருந்து வருகிறது.இப்போது துபாயில் ஆக்ஷன் காட்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இன்னும் சில நாட்களில், என்னவாகும் என்ற எதிர்பார்ப்புடன் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
 ஷூட்டிங் ஆரம்பித்திருப்பதால், ‘விடாமுயற்சி’ பற்றிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது. அந்த தகவல் இப்போது கிசுகிசுவாகி இருக்கிறது.அதாவது, ‘விடாமுயற்சி’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்பதே அந்த கிசுகிசு.வாலிபராகவும், வயது மூத்த ஒருவராகவும் இரண்டு கதாபாத்திரங்கள். இப்படக்குழுவில் ரெஜினா கசாண்ட்ரா இணைந்திருப்பதாகவும், இவருக்கு இளம் அஜித் கதாபாத்திரத்துடன் காட்சிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
சீனியர் அஜித் கொஞ்சம் உடல் எடையுடன் இருப்பது போன்ற தோற்றத்திலும், ஜூனியர் அஜித் ஆக்ஷனுக்கு ஏற்ற தோற்றத்திலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.‘வாலி’, ‘வரலாறு’, ‘வில்லன்’ படங்களுக்குப் பிறகு அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகரித்து இருப்பதால் சமூக ஊடகங்களில் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட்களை அள்ளிவிட்டபடி இருக்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|