வில்லன் கமல்..?



ஆம். அப்படித்தான் டோலிவுட் மீடியாவில் செய்தி கசிகிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல், மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் ஹீரோ பிரபாஸ். 
வில்லனாக கமல் களமிறங்குகிறாராம். இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி என பெரும் நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.‘விக்ரம்’ பட வெற்றிக்குப் பிறகு சினிமாவில் பரபரப்பாகி இருக்கும் கமல், மணிரத்னத்துடன் இணையவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பாகவே ‘கல்கி 2898ஏடி’ படத்தில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

அநேகமாக இந்த அக்டோபர் மாதத்தில் கமல் நடிக்கும் காட்சிகளை எடுக்கும் வகையில் வேலைகள் நடந்து வருகின்றன.வில்லனாக நடிப்பதால், பல முக்கிய காட்சிகள் இருக்கின்றனவாம். 

இதனால் தன்னுடைய கால்ஷீட்டை மூன்று மாதங்களுக்குப் பிரித்துப் பிரித்து கொடுத்திருக்கிறாராம்.கல்கி அவதாரத்தை அப்படியே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்றபடி மாற்றி, ‘கல்கி 2898ஏடி’ படத்தை ஹாலிவுட் வகையறா படமாக எடுப்பதாகக் கூறுகிறார்கள்.

காம்ஸ் பாப்பா