தமிழுக்கு வரும் ஸ்ரீதேவியின் வாரிசு!



ம்ஹும். இவர் அக்கா அல்ல... தங்கை!
யெஸ்.ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார்.

இந்நிலையில், இரண்டாவது மகள் குஷி இதுவரையில் நடிப்பது பற்றி வாயைத் திறக்காமலேயே இருந்தார். 
ஆனால், கடைசியில் பூனை வெளி வந்துவிட்டது.விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆகாஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில்தான் குஷி அறிமுகமாக இருக்கிறாராம். படத்தில் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் நடப்பது போல் இருக்கிறதாம்.

இந்நிலையில்தான் அதர்வாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் போட்டிருக்கிறது.ஸோ, இந்தப் படத்தில் குஷி நடிப்பாரா என்பது கேள்விக்குறி.ஆனால், தமிழில் நடிக்கப் போவது நிச்சயம் என்பது ஆச்சர்யக்குறி!

காம்ஸ் பாப்பா