அஜித்துடன் கைகோர்க்கும் ஹீரோயின்கள்!



அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் ‘விடாமுயற்சி’ பட ஷூட்டிங் எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்டார்ட் ஆகும் நிலையில் உள்ளது. ஷூட் எப்போது ஆரம்பித்தாலும் முதல் ஷெட்யூல் அபுதாபியில்தானாம்.
 இதனால் நட்சத்திரங்களை கொஞ்சம் முன்பாகவே அபுதாபியில் இறக்கிவிட இருக்கிறார்கள்.சமீபகாலமாகவே அஜித் படங்களில் அவருக்கு மனைவி, காதலி என்பது போன்ற ஜோடி யாருமில்லை. யாராவது ஒரு முன்னணி ஹீரோயின் அவருடன் இணைந்து நடிப்பது போலவே திரைக்கதைகள் இருந்திருக்கின்றன.

இதே பாணியில்தான் இப்போது ‘விடாமுயற்சி’யும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்திற்கு ஜோடி த்ரிஷா என்று அதிகாரபூர்வமற்ற தகவல் உலவினாலும், மற்றுமொரு ஹீரோயினும் இருக்கிறார் என்கிறார்கள்.

இந்த கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியைத்தான் கமிட் செய்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். இவர் ‘வலிமை’ படத்தில்நடித்தவர் என்பதால், இவரை உடனே கமிட் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை முடிந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.மறுபக்கம் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி கசிந்தாலும், பிக் பாஸ்’ புகழ் ஆரவ் மற்றொரு வில்லனாக நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.

காம்ஸ் பாப்பா