நோ தம்!



அப்பாவைப் போல் இல்லை. குழப்பாமல் தெளிவாக ஸ்ருதிஹாஸன் பேசுவார். அப்படித்தான் இண்டஸ்டிரியில் எல்லோரும் சொல்கிறார்கள்.அதற்கேற்ப சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லிவிட்டு எல்லோருடனும் நட்போடு இருப்பார்.சமூக ஊடகங்களில், ‘ஸ்ருதி ஹாஸன் தம் அடிப்பார்’ என யாரோ கொளுத்திப் போட, அது புகைய ஆரம்பித்திருக்கிறது.

இதைப் பார்த்த ஸ்ருதி ஹாஸன், ‘நான் தம் அடிக்க மாட்டேன். சிகரெட் மட்டுமில்லை. எனக்கு மது குடிக்கும் பழக்கமும் இல்லை. ஆடம்பரமாகவும் வாழ்வது இல்லை. இப்போது இருக்கிற இந்த நார்மலான வாழ்க்கையே போதுமானது...’ என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.‘இந்த இரண்டிலும் இல்லாத ஆர்வம் எனக்கு இசையில் இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சில சமயங்களில் இசையை ரசித்து ருசித்துச் சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றும்...’ என்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

காம்ஸ் பாப்பா