வலைப்பேச்சு



பேஸ்புக் ஓனரை ஒருவேளை சந்தித்தால், வைக்கிற கோரிக்கை இது மட்டுமே. தமிழகத்தில் மட்டுமாவது, கழிப்பறைகளைப் போல, ஆண்களுக்குத் தனியாக, பெண்களுக்குத் தனியாக என பேஸ்புக்கை பிரித்து விடுங்கள். ஆழமான கோரிக்கை இது.

எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு

பழைய புகைப்படங்களை பார்க்கும்
போது நினைவுகளை விட... அதிக
முடி இருந்ததே பெரும்
ஆயாசத்தை தருகிறது.

சார் யாரு, டெய்லி கோர்ட்க்கு அலையுறீங்களே, அக்கியூஸ்ட்டா?
- அக்கியூஸ்ட்டா?
நா ரெய்டு வந்த ஆபிஸர்ங்க.

தொலைநோக்கு பார்வை என்பது,திங்கள்கிழமை
சாப்பிடுவதற்கும் சேர்த்து ஞாயிற்றுக்கிழமையில் குழம்பு அதிகமா
வைப்பது...

மற்ற கல்லூரிகள் எல்லாம் என்னென்னவோ ஆராய்ச்சிகள் பண்ணினாலும் புதிய விஷயங்களை உருவாக்கினாலும் அதற்கெல்லாம் கிடைக்காத ஊடக வெளிச்சம் ஐஐடிகளின், தானே இயங்கும் வண்டி, ஸ்விட்ச் போடாமல் எரியும் விளக்கு, ரிமோட் கார், ஜோசிய ரோபோக்களுக்கு மட்டும் கிடைத்துவிடுகிறது.

இதற்கு முன்னர் காங்கிரஸ் காங்கிரஸ் என ஒரு கட்சி இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு பல பகுதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒன்றிணைத்து, இந்தி மொழியை திணித்து, எதிர்த்தவர்களை சுட்டுக் கொன்று, மாநில, பிராந்திய கட்சிகளை ஒடுக்கி, உள்நாட்டு மக்கள் மீது ராணுவத்தை ஏவி,  எமர்ஜென்சி, ஆட்சிக் கலைப்பு, கூட்டணி கட்சிகளுக்கு ரெய்ட், வழக்கு என 70 வருடங்களாக அவர்கள் செய்யாத அட்டகாசமே இல்லை. இன்றைக்கு அந்த கட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும். நீங்களாம் ஜஸ்ட் 9 வருசம்.தட் நீ எத்தினி வருசமா கூழ் ஊத்துற மொமெண்ட்

தினம் ஒரு முறையாவது ஃப்ரிட்ஜை குடைகிறேன். உள்ளே பின் வரிசையில் இருக்கும் ஐட்டங்களையும் வாரம் ஒரு முறையாவது திறந்து பார்க்காமல் இருப்பதில்லை. ஆனாலும் எப்படியோ ஒரு மில்க்மெய்ட் டப்பாவை எனக்குத் தெரியாமல் பதுக்கியிருக்கிறது சமூகம். கேவலம் ஓரடி ஆழமும் ஐந்தடி உயரமும் உள்ள பெட்டியைக் கூடச் சரியாக அலசி ஆராயத் துப்பில்லாதவனின் துயரம் உங்களுக்குப் புரியாது. அந்த மில்க்மெய்டைக் கொட்டிக் காய்ச்சிய பாயசத்தையும் வெட்கமின்றி ருசிப்பதனால் எனக்கும் அது புரிய வாய்ப்பில்லை.

‘அப்பாவுக்கு தலைவலிடா இந்தா இத அப்பா தலையில போட்டு விடு’ன்னு வீட்டம்மா புலி தைலத்த குடுத்து விட்டா என் பையன் கிட்ட... ‘இத போட்டா சரி ஆய்டு
மா’ன்னு சந்தேகத்திலயே மறுபடி கேட்டான். கேட்டபடி லொட்டுன்னு மண்ட மேல போட்டு ‘அப்பா சரி ஆயிடும்’ன்னுட்டு போயிட்டான். கண்ணுல கத கத ன்னு தண்ணி வந்துட்டு இருக்கு...

குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியின்திட்டை சமாளிக்க மடிக்கணினியைஎடுத்துகொண்டு வேலை செய்யதுவங்கினான்.மனைவி: குடிச்சீங்களா?
கணவன்: இல்லம்மாமனைவி: குடிகார சனியனே அப்புறம் ஏன் சூட்கேசை தொறந்து வெச்சு டைப் பன்ற!

‘‘ட்யூட், இந்த தலையில மாட்டி இருக்க என் காலை கொஞ்சம் இறக்கி விட்றியா?”
‘‘ஏன் டா, என்ன செய்த?”
“இன்னைக்கு யோகா டே இல்ல...”
“அடேய்...”

சமைப்பதை விட சவாலானது என்ன சமைப்பது என தீர்மானிப்பது.

இந்தியா உக்ரைனில் அமைதி திரும்புவதையே விரும்புகிறது - ஜீ!
அப்போ மணிப்பூர்ல ஜீ?

கோபப்படுறதுக்கு குழந்தையிலிருந்தே யாருக்கும் சொல்லித்தர தேவையில்ல. பொறுமையாக இருக்கத்தான் கத்துக்கனும் பெரியவங்களும்
கூட...

இந்த ஃபேஸ்புக்கைப்பத்தி சுருக்கமாச் சொல்லுங்கண்ணா..
- சுருக்கமான்னா, தம்பி இது ஒரு மக்கள் நீதிமன்றம்...
இங்கே எல்லோரும் நீதிபதிகள்
அவ்வளவு ஜனநாயகமா..?

- ஆமா, எவ்வளவு ஜனநாயகம்ன்னா
ஒண்ணுமில்லாத விஷயத்தை,
ஒரு லட்சம் நீதிபதிகள்
சுமோட்டோவா எடுத்துக்கிட்டு டொமோட்டோ ஆக்குவாங்க...
இதுல நீங்க எங்க இருக்கீங்கண்ணா...

- நானெல்லாம்
இதுல சிறப்பா செயல்பட்டு,
ஆளுநரா  ஆகற அளவுக்கு
ஆளாயிட்டேன் தம்பி

அம்மாவை பற்றிய புகார்களை அப்பாவிடம் சொல்லி எந்த பயனுமில்லையென்ற புரிதல் வரும்போது, நாம் குழந்தை தனத்தை இழந்து விட்டோம் என அறிக.

நெருக்கமாகப் பட்டப் பெயரிட்டோ, செல்லமாகவோ கூப்பிட்டுப் பழகிய ஒரு உறவை அந்த உறவு அந்நியமானபின் அவரது ஒரிஜினல் பெயரைச் சொல்லி அழைப்பது வேதனையான விஷயம்.

சமீபத்தில் ஓர் கவிஞர் அவரது நெருங்கிய நண்பரான எழுத்தாளர் ஒருவரது நட்பிலிருந்து விலகுவதாக அறிவிக்கும்போது அவரது புனைப்பெயரைச் சொல்லாமல் ஒரிஜினல் பெயரைச் சொன்னார்.விலகலின் வேதனையான விஷயங்களுள் அதுவும் ஒன்று.

வீட்டுக்கு வந்திருந்த மூத்த தம்பதி  பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்:‘‘அக்கா... கடைசியா வேகன் ஆர் - ஆட்டோ கியர் வாங்கணும்னு முடிவாகி, வேகன் ஆர் எடுத்தோம். வாங்க முன்னாடியும் சரி... இப்ப வாங்கினப்புறமும் சரி ரோட்லே ஓடற கார்கள்லே பாதிக்கும் மேலே வேகன் ஆர் - ராவே கண்லே படுதுக்கா...’’
அவர் சொன்னார்: ‘‘எனக்கும் அப்படித்தாங்க... ஆக்டிவா எடுக்கணும்னு நினைச்சேன். எடுக்க முந்தியும் சரி... எடுத்ததுக்கு அப்புறமும்சரி...
ரோடுலே ஓடற டூ வீலர்கள்லே பாதிக்கும் மேலே ஆக்டிவா ஆகவே கண்ணிலே படுது...’’
மனமதுகண்டதே காட்சி
கொண்டதே கோலம்

பே பண்ண லைன்ல நிக்க சொல்லிட்டு அப்பறமா திரும்பவும் சில பொருட்கள் எடுக்க போற மனைவிகள்... அவங்க திரும்ப வரர்துக்குள்ள நம்ம டர்ன் வந்த உடனே ஒரு பதட்டம் ஆகும்
பாருங்க...

பொதுவா இணையத்துல ரெண்டு தரப்பு மோதிக்குதுன்னா நாம ஏதாச்சும் ஒரு பக்கம் நின்னு பேசலாம். பட்டி மன்றம் மாதிரிதான் எல்லாமே! உதாரணம்: ஆண்டவர் - மாரி பிரச்னை. இந்தப்பக்க பாயிண்டை பேசினா இந்தப்பக்கம். அந்தப்பக்க பாயிண்டை பேசினா அந்தப்பக்கம். வழக்கமா ஏதாச்சும் ஒரு பக்கம் பேசுவேன்.இப்ப என்னடானா கொஞ்ச நாளா ரெண்டு பக்க நியாயமும் சீர்தூக்கிப் பாக்கணும்னு தோணுது. எனக்கு பட்டிமன்ற நடுவராக தகுதி வந்துடுச்சுனு நினைக்கிறேன். ஹிஹி!