மனித மூளைக்குள் சிப்!
மனித மூளைக்குள் சிப் ஒன்றைப் பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.‘‘இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கும். இந்த சோதனை இப்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூராலிங்க் சோதனை தொடங்கும்.
 இதன்மூலம் மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களிடம் தனது குழு கேட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது...’’ என்று மஸ்க் கூறியுள்ளார்.எலான் மஸ்க்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் இதனை மேற்கொள்கிறது.
காம்ஸ் பாப்பா
|