ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத் ஆட்சி!
இசை ரசிகர்களின் அள்ள அள்ளக் குறையாத இசைச் சுரங்கமாக இருப்பது ஸ்பாட்டிஃபை app.சர்வதேச அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இசை செயலிகளில் இதுதான் முன்னணியில் இருக்கிறது.ஒரு பாடலையோ ஒரு இசைத் தொகுப்பையோ எத்தனை பேர் கேட்டார்கள், எத்தனை முறை கேட்டார்கள், எவ்வளவு நேரம் கேட்டார்கள், உலகின் எந்தப் பகுதியிலிருந்து கேட்டார்கள் என்பதை துல்லியமாக இந்த appல் அறிந்துகொள்ள முடியும்.
 அந்த வகையில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களை இசையமைத்தவர் யார்..?
அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்! இந்த ஆண்டில் இவரது பாடல்கள் 160 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. 183 நாடுகளிலிருந்து 5.7 கோடிப் பேர், 11 கோடி மணி நேரம் இவரது பாடல்களைக் கேட்டிருக்கிறார்கள். நான்காவது இடத்தில் இருப்பவர் அனிருத். இவரது பாடல்கள் 110 கோடி முறை கேட்கப்பட்டிருக்கிறது. 182 நாடுகளிலிருந்து 3 கோடிப் பேர் இவரது இசையைக் கேட்டிருக்கிறார்கள். 8 கோடி மணி நேரம் இவரது பாடல்கள் ஒலித்திருக்கின்றன.
காம்ஸ் பாப்பா
|