விஜய்யுடன் மோதும் விஷால்?



அடைமழை என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்டில்தான். அவர் தொட்டது எல்லாம் சக்சஸ் என்பதால் மோஸ்ட் வாண்டட் ஆகியிருக்கிறார். லேட்டஸ்ட் விஷயம், லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விஜய் படத்தில் வில்லனாக விஷால் நடிக்கப் போகிறார் என்பது! ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக களமிறக்கியதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு. அதேபோல் ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் சூர்யாவை மோத வைப்பதற்கான களத்தை காட்டியதற்கும் உலகம் முழுக்க ஏகோபித்த கொண்டாட்டம்.

ஸோ, இதைப்போலவே பாப்புலாரிட்டியை அறுவடை செய்ய ஒரு முன்னணி ஹீரோவை வில்லனாக இறக்கவேண்டுமென டிஸ்கஷனின்போதே முடிவு செய்துவிட்டது லோகி அண்ட் டீம்.இவர்களது முதல் சாய்ஸ் மலையாளத்தில் ஆக்‌ஷன் படங்களை இயக்கி நடிக்கும் ப்ரித்விராஜ்.

ஆனால், பிரபாஸ் நடிப்பில் ‘கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வரும் ‘சலார்’ படத்தில் வில்லனாக ப்ரித்விராஜ் நடித்து வருவதால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனையடுத்துதான் விஷால் இந்த ப்ராஜெக்ட்டுக்குள் வந்திருக்கிறார்
என்கிறார்கள். எல்லாம் கைகூடிவந்தால் விஜய்க்கு வில்லனாக விஷால் களம் இறங்குவார்!

காம்ஸ் பாப்பா