லிட்டில் ஃபேஷன் டிசைனர்!



இன்ஸ்டாகிராமை கலக்கிக்கொண்டிருக்கிறான் சிறுவன் மேக்ஸ். ‘couture.to.the.max’ எனும் அவனது இன்ஸ்டா பக்கத்துக்குச் சென்றால் ஒவ்வொரு பதிவும் ஆச்சரியமளிக்கிறது.
அப்படி அவன் என்ன செய்துவிட்டான் என்கிறீர்களா? நான் வளர்ந்து பெரியவனானதும் டாக்டராக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என்று சொல்லும் குழந்தைகளுக்கு மத்தியில் டிரஸ் மேக்கராக வேண்டும் என்று பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறான் மேக்ஸ். அப்போது அவனுக்கு வயது 4தான்.

பெற்றோரும் மகனின் விருப்பப்படி ஒரு டிரஸ் மேக்கருக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொடுத்திருக்கின்றனர். ஒரு பொம்மையுடன் விளையாடுவதைப் போல அந்தப் பொருட்களை வைத்து விதவிதமாக ஆடைகளை உருவாக்கியிருக்கிறான் மேக்ஸ். அசந்துபோன பெற்றோர் மேக்ஸுக்கு முறையான டிரஸ் மேக்கிங் பயிற்சியைக் கொடுத்திருக்கின்றனர். 

அடுத்த இரண்டு வருடங்களில் வருடத்துக்கு 60 விதமான ஆடைகளை டிசைன் செய்யும் லிட்டில் ஃபேஷன் டிசைனராக வளர்ந்துவிட்டான் மேக்ஸ். அவன் டிசைன் செய்த ஆடைகள் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. ஆறு வயதில் இவ்வளவு திறமையா என்று மேக்ஸ் குறித்து வியப்பதில் ஆச்சர்யமில்லைதானே.

த.சக்திவேல்