காமப் பிசாசாடா நீ!



தலைப்பில் இருக்கும் வார்த்தையை அப்படியே காதலனைப் பார்த்து கறாராகக் கேட்கும் இவானாதான் இப்போது இணைய டிரெண்ட். இக்காலக் காதலியின் மொத்த டெம்ப்ளேட்டாக இருக்கும் இவானா, கேர்ள் நெக்ஸ்ட் டோர், நம்ம வீட்டுப் பொண்ணு சாயலில் பல இளசுகளுக்கும் ஃபேவரிட் சாய்ஸாகியிருக்கிறார்.
சமீபத்திய ‘லவ் டுடே’ படம் மூலம் ஹீரோயினாக நடித்திருக்கும் இவானா, ஏற்கனவே பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

உங்க மொபைலுக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் பற்றி சொல்லுங்க!எனக்கு மட்டுமில்ல, எல்லாருக்குமே நாம வெளிய பார்க்கறது ஒரு முகம், மொபைல்ல இருக்கும்போது இன்னொரு முகம். ஆனா, மொபைல்ல இருப்பதுதான் ரியல் முகம் என்கிற அந்த அளவுக்கு செல்போன் மாறிடிச்சு, மாத்திடுச்சு.

நம்ம அத்தனை பெர்சனலும் மொபைலுக்குத் தெரியும். அதனாலயே இப்ப மொபைலை பயன்படுத்தறதை நான் குறைச்சிட்டு இருக்கேன். நீங்களும் பழகிக்கோங்க. ஆக்சுவலா செல்போனால் ரியாலிட்டியே மிஸ் ஆகுது. பல வருஷங்களா மொபைல்ல சாட் செய்த நபரை நேர்ல பார்த்தா பேசவே முடியாத நிலைலதான் நாம எல்லாருமே இருக்கோம். இதை நான் காலேஜ்ல அனுபவிச்சேன். ரெண்டு வருஷமா காலேஜ்லாம் போகாம மொபைல்லயே பேசிட்டு, மீம், வீடியோ, டிரோல்ன்னு இருந்தோம். ஆனா, திடீர்னு நேர்ல அதே ஃப்ரெண்ட்ஸ பார்த்தப்ப யாரோ மாதிரி ஒரு ஃபீல் இருந்துச்சு. அதை கடந்து வர ரொம்ப கஷ்டப்பட்டோம்.

அதனால மொபைல் பயன்பாட்டை முடிஞ்சவரை குறைச்சிடுங்க. இல்லைன்னா உண்மையாவே நாம யாருன்னு ஒரு டவுட் வந்திடும். உங்களைப் பற்றி சொல்லுங்க?

கேரளா கோட்டயம்சொந்த ஊர். எம்.காம்  2ம் வருஷம் படிச்சிட்டு இருக்கேன். படிச்சிட்டே நடிச்சிட்டும் இருக்கேன். அப்பா ஷாஜித் செரியன், பிஸினஸ்மேன். அம்மா டின்ஸி ஜான், ஹோம் மேக்கர். ட்வின் பிரதர் லியோ, அக்கா லயா. சின்ன வயசுல இருந்து சினிமா பிடிக்கும். அப்பா, அம்மாவுக்கும் சினிமான்னா ரொம்பப் பிடிக்கும். ‘இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க நீ லக்கி’ன்னு சொல்ற டைப். அதனால் இந்தக் கரியரை தேர்வு செய்யவும் எதிர்ப்பு இல்ல. மாறாக சப்போர்ட்தான் அதிகமா இருந்துச்சு.

முதல் பட வாய்ப்பு பற்றி சொல்லுங்க?

6, 7வது படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமா ஒண்ணு ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, காலேஜ்ல படிக்கறப்போதான் ‘நாச்சியார்’ பட வாய்ப்பு கிடைச்சது. சும்மா ஸ்கூல்ல டிராமா, டான்ஸ்ன்னு இருந்தேன். சுத்தமா சினிமா, நடிப்பு இதெல்லாம் எதுவுமே தெரியாது. எல்லாமே பாலா சார்தான் சொல்லிக் கொடுத்தார். சீரியஸா ஒரு சினிமா ஷூட் எப்படி இருக்கும்னு அங்கதான் கத்துக்கிட்டேன். ஒரு குழந்தைக்கு எல்கேஜி டீச்சர் எவ்ளோ முக்கியமா அவ்ளோ முக்கியம் எனக்கு பாலா சார்.

‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் என்ன சொல்கிறார்?

செம டெடிகேஷன். ஸ்கிரிப்ட், கதை, இயக்கம், பாடகர்... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். படம் முழுக்க என்னை அழகா, நான் எப்படி ரியல்ல இருக்கேனோ அதே ஸ்டைல்ல காண்பிச்சிருக்கார். இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் என் கேரக்டருக்கு அப்படியே எதிரா இருந்திருக்கும். ஆனா, இந்த ‘லவ் டுடே’ படத்திலே என் கேரக்டர் இப்ப இருக்கற கேர்ள்ஸ அப்படியே காட்டும். சில இடங்கள்ல ‘அட நாம இப்படித்தான் இருப்போம்ல?!’, ‘நமக்கும் இப்படி நடந்திருக்கே...’ இப்படி நிறைய கனெக்ட் செய்துக்கற கேரக்டர்.

தமிழ் நல்லா பேசுறீங்களே... எப்படிகத்துக்கிட்டீங்க?

அது ஒரு செம ஸ்டோரி. நான் டிராவல் செய்யும்போது நேம் போர்ட், பஸ்ல இருக்கற போர்ட்... இதெல்லாம் ஒண்ணு விடாம படிப்பேன். அதைவிட முக்கியம் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த குரு தமிழ் சினிமாதான். அப்படித்தான் கத்துக்கிட்டேன்.

பிறந்ததில் இருந்தே ஃபிட்டா, இல்லை டயட், ஒர்க்கவுட் எல்லாம் உண்டா?

என்னைய பார்த்தா டயட் எடுக்கற மாதிரியா இருக்கு! செம ஃபுட்டீ நான். கிடைக்கற எல்லாமே சாப்பிடுவேன். சின்ன வயதில் இருந்தே என் உடல்வாகு இதுதான். நான் அண்டர் வெயிட்ல கூட இருந்திருக்கேன். ஒருவேளை இப்படியே இருந்தா டயட் தேவைப்படாதுல்ல?!

உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?

நெக்ஸ்ட் பாலா சார் அசிஸ்டெண்ட் மந்த்ரா இயக்கத்திலே ‘காம்ப்ளெக்ஸ்’ படம் முடிச்சாச்சு. சமூகம் சார்ந்த ஒரு படம், நிறைய பேருடைய பெர்சனாலிட்டி பத்திப் பேசக்கூடிய கதை. ஜிவி.பிரகாஷ் சார் கூட ஒரு படம் முடிச்சிட்டேன். எல்லாமே அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும்.

ஷாலினி நியூட்டன்