விராட் கோலியின் ரூம்!



டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்காக ஆஸ்திரேலியா பெர்த் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்கியுள்ளனர்.

அங்கே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் தங்கியிருக்கிறார். அவரே அறியாமல் ரசிகரும் ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளருமான ஒருவர் ‘கிங் விராட் கோலியின் அறை’ என வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதனால் அவரின் சிதறிக் கிடக்கும் உடைகள் முதல் அவர் பயன்படுத்தும் காஸ்மெட்டிக், ஷாம்பூ உள்ளிட்ட அத்தனையும் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளன. இதனால் வருத்தமடைந்த விராட் கோலி இவ்வாறு தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘‘என் ரசிகர்கள் சந்திப்பதையும், ஆர்ப்பரிப்பதையும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள துடிப்பதையும் நான் எப்போதும் வரவேற்பவன். ஆனால், இப்படி என் அனுமதியின்றி என் ஹோட்டல் ரூம் அறையை வீடியோவாக பகிர்வது என் தனிமனித சுதந்திரத்தைக் கெடுத்திருக்கிறது. நான் புக் செய்த அறையில் என்னால் சுதந்திரமாக இருக்க முடியாது எனில் வேறு எங்கு இருப்பது..?’’ எனக் கேட்டிருக்கிறார் விராட் கோலி.

இதற்கு பதில் சொல்லும் விதமாக ‘மிஸ் டைவா யுனிவர்ஸ் 2015’ மற்றும் ‘லெஜெண்ட்’ பட நாயகி ஊர்வசி ரௌதேலாவும் ‘‘உங்களுக்கே இப்படியெனில் பெண்கள் அறைகளும் அவர்களது உள்ளாடை சகிதமாக பகிரப்படுவதை யோசித்துப் பாருங்கள்...’’ என பதிலுக்கு நொந்துகொண்டுள்ளார்.

ஷாலினி