சாதனைக் குத்து!



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து...’ பாடல் மெகா ஹிட் என்பது பிறந்த சிசுவுக்கும் தெரியும்.

விஷயம் இதுதான். ஆனால், இது மட்டுமே அல்ல!
அனிருத் இசையமைத்த இந்தப் பாடல் ஸ்பாட்டிஃபை இணையதளத்தில் 100 மில்லியன் தடவை கேட்கப்பட்ட பாடலாக சாதனை செய்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட்!ஏனெனில் இந்த சாதனையை செய்திருக்கும் முதல் தென்இந்திய பாடல் இதுதான்!100 மில்லியன் என்றால் பத்து கோடி. ஸோ 10 கோடி முறை இந்தப் பாடல் உலகம் முழுக்க கேட்கப்பட்டிருக்கிறது!வாரே வாவ்!

காம்ஸ் பாப்பா