SAM கவலை!



தலை போகிற கவலையில் இருக்கிறார் சமந்தா.அந்தக்கால வைஜெயந்தி மாலாவில் தொடங்கி ஸ்ரீ தேவி வரை தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் சூப்பர் ஹிட் நட்சத்திரமாக ஜொலித்து பின் இந்தியில் கனவுக் கன்னியாக காலூன்றியவர்கள் பலர்.
இந்தப் பட்டியலில் இணைய வேண்டும் என்பதே அனைத்து நடிகைகளின் கனவும்.சமந்தா மட்டும் விதிவிலக்கா என்ன? மும்பை சென்று இந்திப் பட முயற்சிகளில் இறங்கினார். வெப் சீரிஸில் நடித்தார். கரண் ஜோஹர் தயாரிப்பில் ஒரு படத்தில் ஒப்பந்தமானார்.

‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமாருடன் கலந்துகொண்டு மும்பை நட்சத்திரங்களுடன் ஐக்கியமானார். அடுத்து சல்மான் கான் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற செய்தி காற்றுவாக்கில் பரவியது.இந்தச் சூழலில்தான் இடியாக அச்செய்தி பரவுகிறது. அதாவது, சல்மான் கானுடன் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் கசிகிறது.சமந்தாவின் கவலைக்கு இதுதான் காரணம்!

காம்ஸ் பாப்பா