திங்கள்தான் மோசமான நாள்!



வாரத்தின் ஏழு நாட்களில் திங்கள்கிழமைதான் மோசமான நாள் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் (Guinness World Record) அறிவித்துள்ளது.வாரக் கடைசிக்குப் பிறகு வரும் முதல் வேலைநாள் என்பதால், மக்கள் திங்கள்கிழமையை அதிகமாக வெறுக்கிறார்கள். அதனால் வாரநாட்களில் மிகவும் மோசமான நாளாக திங்கள்கிழமையைக் கருதுகிறோம் என்று இந்த கின்னஸ் உலக சாதனை புத்தகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இந்த டுவிட்டர் அறிவிப்புக்கு நெட்டிசன்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பலரும் ‘லைக்’ செய்துள்ளனர்.
மற்றும் சிலர், ‘வாரத்தின் மோசமான நாள் திங்கள்கிழமை என்று கண்டறிய உங்களுக்கு இத்தனை நாள் ஆனதா’ என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்!
அதானே... நமக்குத் தெரியாதா? கின்னஸ் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?!

காம்ஸ் பாப்பா