ஹீரோயின் ஆன டப்ஸ்மாஷ் குயின்!



டப்ஸ்மாஷ் மூலம் வைரல் மோட் போனவர், இப்போது வைரஸை விட வேகமாக தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான்மிருணாளினி ரவி.

இப்படி ஓவர்நைட்ல மொத்த தமிழ் சினிமாவையும் திக்குமுக்காட வெச்சிட்டீங்களே?இப்போ நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு. நான் விஷாலுக்கு ஜோடியா..? விக்ரம் சார் கூட பாட்டா..? ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு மியூசிக் போடுறாரா..? இப்படி தலைக்குள்ள கேள்விகள் சுத்திக்கிட்டே இருக்கு. ஆனால், எதையும் தலைக்கு ஏத்திக்கக் கூடாதுன்னு தெளிவா இருக்கேன்.டப்ஸ்மாஷ் குயின், தமிழ் சினிமா டைவா ஆனது எப்படி?

சினிமா சான்ஸ் முன்பே நிறைய வந்துச்சு. ஆனா, வீட்ல யாருக்குமே உடன்பாடு இல்லை. வீட்டிலே எல்லாருமே படிப்ஸ், இன்ஜினியர், பிஸினஸ், டாக்டர் இப்படி இருக்காங்க. நான் நடிகைன்னா எப்படி சம்மதிப்பாங்க? எனக்கும் அதிலே ஒரு பெரிய தயக்கம் இருந்துட்டே இருந்துச்சு. அப்பறம்தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலே ஏலியனா சின்ன கேரக்டர் வந்தது. சரி, திரும்பத் திரும்ப வாய்ப்பு கதவைத் தட்டுதேன்னு ஒரு முயற்சி கொடுத்துப் பார்ப்போமேன்னு செய்தேன்.

கிளிக் ஆச்சு. இதிலே என் டப்ஸ்மாஷ் பார்த்துட்டு தமிழ் சினிமாவிலே கூப்பிட்டா கூட ஓகே... தெலுங்கிலயும் ‘கட்டலகொண்டா கணேஷ்’ பட வாய்ப்பு வந்ததை என்னனு சொல்ல... அடுத்து ‘சாம்பியன்’ பட ஹீரோயின். எல்லாம் கடவுள் அருள்.ஹீரோயின் மிருணாளினி வாழ்க்கை எப்படி இருக்கு?

எதுவுமே மாறலை. மாத்திக்கவும் விரும்பல. இப்பகூட ஒரு இடத்துக்கு போகணும்னா ஆட்டோ, டாக்ஸிலதான் போறேன். நாம என்ன பிறக்கும்போதே கையில குடை, ஒரு அசிஸ்டண்ட் கூடவா பிறந்தோம்..? முன்னாடியாவது வீட்ல ஒரு காபி, டீ கேட்டா போட்டுக் கொடுப்பாங்க. இப்ப ஹீரோயின் ஆனதுக்கப்புறம் சாதாரணமாக ‘ஒரு டீ போட்டு கொடுங்கம்மா’னு கேட்டா கூட ‘நீ வீட்ல ஹீரோயின் கிடையாது’னு சொல்லி என்னையவே போட வெச்சிடுறாங்க! நானும் இப்படி இருக்கத்தான் விரும்புறேன்.

உங்க அடுத்தடுத்த படங்களோட கேரக்டர்கள் பத்தி சொல்லுங்களேன்?

கேரக்டர்கள் பத்தி சொல்லணுமா... அடிவாங்க விட்டுடுவீங்க போலவே! ஆக்ச்சுவலி நான் காலேஜிலிருந்து நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனா, இது யாருக்குமே தெரியாது. குறிப்பா
‘எனிமி’ பட டைரக்டர் ஆனந்த் சார் இந்தப் பொண்ணுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமான்னே கேட்டார்! அவர் மட்டுமில்ல, சுத்தி இருக்குற எல்லாருமே கேட்டாங்க.
அப்புறம் சாங்ஸ் ஷூட்ல பிருந்தா மாஸ்டர் அமைச்ச கோரியோகிராபிக்கு நான் ஆடினதும் மாஸ்டரே, ‘என்னப்பா... இவள போய் டான்ஸ் ஆடத் தெரியுமான்னு கேட்டீங்க, இவ டான்ஸர்ப்பா..!’னு பாராட்டினாங்க!

‘கோப்ரா’ படத்துல எனக்கு ஒரு முக்கியமான பார்ட். எனக்காக ரஹ்மான் சார் மியூஸிக் போட்டிருக்காரு. நினைக்கும்போதே செம்ம சர்ப்ரைஸா இருக்கு. ‘எம்ஜிஆர் மகன்’ படம் பத்தி உங்களுக்கே தெரியும். கதையே என்கிட்ட இருந்துதான் ஆரம்பிக்கும். எனக்கு ஒரு பிரச்சனை. அதுக்காக தேனி வரேன். அதன்மூலமாக நடக்குற கதைதான் படம். ‘ஜாங்கோ’ல நான் கேர்ள் நெக்ஸ்ட் டோர்.

வேலையை விடும்போது என்னென்ன கேள்விகள் இருந்துச்சு..?

அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க... ‘சூப்பர் டீலக்ஸ்’க்குப் பிறகு இரண்டு தெலுங்கு படங்கள். சரி, இன்னும் நிறைய படங்கள் வரும்னு 2019ல வேலைய விட்டேன். பார்த்தா கொரோனா! ஒரு படமும் ரிலீஸ் ஆகல. ஆனா, வரிசையா படம் நடிக்கறேன்! வாழ்க்கை பத்தி நிறைய கேள்விகள் வர ஆரம்பிச்சது.

எதுவுமே நம்ம கைல இல்லனு புரிஞ்சுது. நான் எதையுமே இப்ப வரைக்கும் சிந்திக்கவே இல்லை. கடவுள் எனக்கு ஏதோ ஒண்ணு  திட்டமிட்டிருக்கார். அப்படியே போகணும். அதேசமயம் காசு வருது  அப்படிங்கறதுக்காக கிடைக்கிற எல்லா படத்திலேயும் நடக்கக் கூடாது என்கிறதுல  தெளிவா இருக்கேன். நடக்கற எந்த விஷயமும் நான் கனவில் கூட நினைச்சுப்  பார்க்காத விஷயங்கள். இந்த வாழ்க்கையே எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம்.
என்ன இப்படி சொல்றீங்க... உங்களுடைய ஒரு ஹாட் சீன் செம வைரல் ஆச்சே..?

‘சாம்பியன்’ படத்தில்தான் அந்த சீன். ஆக்ச்சுவலி மாப்பிள்ளை பார்க்க வர கூட்டத்தை நான் விரட்டி அடிக்கணும். அதனால செக்ஸியாக ஒரு டான்ஸ் ஆடணும்னு இயக்குநர் சொன்னார். அது காமெடி சீன். ஆனா, நம்ம ஆளுங்கதான் எடிட்டிங்ல விளையாடுவாங்களே... அதுல வேற ஏதேதோ பாட்டு எல்லாம் சேர்த்து பக்கா ஹாட் சாங்கா ரிலீஸ் செய்துட்டாங்க!  

ஷாலினி நியூட்டன்