வலைப்பேச்சு



@deltatamilian - நாட்டிலுள்ள முன்னணி நான்கு பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மசோதா மக்களவையில் எம்பிக்களின் அமளியையும் மீறி குரல்
வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. கடந்த ஜூனில் அறிவித்ததை வெற்றிகரமாக செய்து முடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

@GreeseDabba2 - ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னு கேள்விப்பட்டா, ‘எந்த தியேட்டர்’னு கேட்ட காலம் போய், ‘எந்த சேனல்’னு கேட்க ஆரம்பிச்ச முதல் தலைமுறை நம்மதான்...

@HariprabuGuru - சந்துல இவ்வளவு சண்டை நடக்கும்பொழுதும் அமைதியா வேடிக்கை பார்க்குற பக்குவத்தை எனக்குத் தந்த என் மனைவிக்கும், அம்மாவுக்கும், அவர்களின் மாமியார் மருமகள் சண்டைகளுக்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்...

@mohanramko - கஷ்டப்பட்டு வியர்வை ‘சிந்து’ம் எல்லோருக்கும் பதக்கம் நிச்சயம்!

@Kozhiyaar - நம்மை எல்லாம் எழுப்ப அலாரம் வைக்கணும். ஆனா, ஜீயை எழுப்ப கேமராவை அவர் பக்கத்தில் வைத்து க்ளிக் பண்ணா போதும்!

@அப்பணசாமி - தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் தமது அயராத பணிகளுக்கு இடையே தமிழக பண்பாடு மற்றும் இலக்கியச் செழுமையின் தூதுவராகவும் மாறி விட்டார். செல்லுமிடமெல்லாம் தலைசிறந்த புத்தகங்களை விதைத்து ஒரு உலகளாவிய வாசிப்பு இயக்கத்தையும் நடத்துகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு இரா.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப எழுதிய ‘Journey of a Civilization’, தில்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தபோது ஓவியர் மனோகர் தேவதாஸ் எழுதிய ‘Multifacet of My Madurai’, இன்று (2-8-2021) மீண்டும் கொடுமணல் ராஜன் எழுதிய ‘Early Writing System: A Journey from Grafitti to Bhrami’ புத்தகங்களை வழங்கினார்.

முத்தாய்ப்பாக, குடியரசுத் தலைவருக்கும் அவருடன் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் கலைஞரின் படத்திறப்பு விழாவுக்கு வந்த விருந்தினர்களுக்கும் தலைசிறந்த நவீன தமிழ் இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’, சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, கி.ராஜநாராயணன் தொகுத்த ‘கரிசல் கதைகள்’, நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’, ராஜம் கிருஷ்ணனின் ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’, பி.எஸ் சுந்தரம் மொழிபெயர்ப்பில் வெளியான ‘திருக்குறள்’ ஆகிய இந்த ஐந்து புத்தகங்களும் தமிழின் தொன்மை முதல் நவீனம் வரையான இலக்கிய வரலாற்றின் ஒரு கீற்று எனலாம். முதல்வரின் முன்னெடுப்பு மீண்டும் வாசிப்பு இயக்கத்தை உருவாக்கட்டும்.

@shivaas_twitz - பத்தாம் கிளாஸ் பரீட்சை ரிசல்ட் மாதிரி ஒலிம்பிக்லயும் பொண்ணுங்கதான் மெடல் வாங்குறாங்க...

@skpkaruna - இதிருக்கட்டும்! ஏசி குளிர் அதிகமா இருந்தால் கூட கைகட்டக் கூடாதா? கைகட்டினாலே அடிமைத்தனமா? ஏவி.எம் சரவணன் எந்நேரமும் மேடையில் கைகட்டி நிற்கிறாரே! தமிழ் நாட்டில் தலித் தலைவராக இருப்பது இத்தனை கடினமாக இருந்ததே இல்லையே!ஃபோட்டோ ஷாப் + சங்கி மூளை = கேவலமான சிந்தனை.

@Muthusa34725375 - தம்பி... வாக்கிங் வந்த இடத்துல ரெண்டு போண்டாவ வாங்கி திங்கிறியே... அப்றம் எப்படி பலன் கிடைக்கும்..?
வாக்கிங் வந்ததே போண்டா வாங்கித் திங்கதான்... போவியா...

@TRAMESH21548526 - இருக்கா இல்லையான்னு சோதிச்சிட்டே இருக்குறதுக்கு பெயர் அன்பு அல்ல... சந்தேகம்..!

@Paadhasaari Vishwanathan - இரண்டாம் உலகப் போர் நடந்த ஆறு ஆண்டுகளில் (1939 - 1945) சுமார் ஏழு கோடிப் பேர் உயிரிழந்தனர் என்கிறது வரலாறு.
மனிதர்கள் உருவாக்கிய இந்த பேரழிவின் முன் கொரோனா கிருமியின் பலி வாங்கல் குறைவுதான்! வரலாறு என்பதில் பெரும்பங்கு மனிதனுக்கு மனிதனே இழைக்கும் துரோகம்தான்.
கிருமிக்கும் துரோகத்துக்கும் சம்பந்தமில்லை!

@ItsJokker - மேகதாது அணை போராட்டம்னா என்ன?
அ.மலை - பாஜகவோட ஆட்சியில, கர்நாடக பாஜக கொண்டு வர்ற திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு பாஜக பண்ற போராட்டம்தான்...

@amuduarattai - கணவர் எல்லா திறமையையும் காட்டி கஷ்டப்பட்டு ஜெயித்து கப்பு வாங்கிட்டு வந்தாலும், ‘காசிராஜன் பாத்திரக் கடை’யில் கப்பு வாங்கியதாகத் தான் மனைவி நினைப்பார்.

@thoatta - 400 ரூபா லுங்கி / 4 கோடி ரூபா சூட்!

@Thaadikkaran -
என்னாங்கடா டேன்சிங் ரோசு... அம்மா அடிக்க வரும்போது அடி மேல படாம இருக்க அங்குட்டும் இங்குட்டும் டான்ஸ் ஆடுற எல்லா குழந்தையும் டேன்சிங் ரோசுதான்யா...

@LAKSHMANAN_KL - மக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். அது செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்! - மோடி.
எட்டு மாசமா விவசாயிகள் கதறிக்கிட்டு இருக்காங்களே... அது உங்க காதுல ஒலிக்கலையா..?

@LawyerJayaraj - நன்றி முதல்வரே! இந்த ஒரு படம் போதும் உமது சாதனைக்கு. அரசு பேருந்தில் இலவச பயணம் செல்லும் பெண்கள்!

@Vasu Devan - திருச்சியில் வாழ்ந்தபோது 80கள் வரைக்கும் காவிரியிலும் கொள்ளிடத்திலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது பசுமையாக நினைவில் உள்ளது. பரிசல் ஓடிய காலம். நாகப்பட்டினம், பூம்புகார் வரை கரையோரங்கள் பச்சைப் பசேல் என குளிர்ச்சியாகக் காட்சியளிக்கும். தஞ்சை - குடந்தை தூரம் 40 கிமீ.  எனக்குத்தெரிந்த வரையில் தமிழ்நாட்டின் மிகச்செழிப்பான பகுதி இதுதான். குறிப்பாக பாபநாசம், சுந்தரபெருமாள் கோயில் ஊர் நிலத்தில் சூரிய வெளிச்சமே விழாது. அந்தளவுக்கு அடர்த்தியான வனாந்திரமும், வயலும் சார்ந்த பகுதி. 1977  நவம்பர் மாதம். நாகப்பட்டினத்தில் புயல். திருச்சி, தஞ்சை, குடந்தை, புதுக்கோட்டை சின்னாபின்னமாகியது.

தமிழ்நாட்டின் மிகக்கோரமான இயற்கைப் பேரழிவு. கொள்ளிடம் உடைந்தது. திருச்சி மிதந்தது. எட்டு அடிக்கு நகரத்திற்குள் தண்ணீர். வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. பள்ளி / கல்லூரிகளில் வெள்ளம் புகுந்து நூலகங்கள் அழிந்தன. உயிர் பிழைக்க மக்கள் மலைக்கோட்டைக்குள் ஏறினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான கால்நடைகள் செத்து தண்ணீரில் மிதந்தன.  

குலை நடுங்கவைக்கும் பேரழிவு. ஒருவாரம் கழித்து நிவாரண உதவிகளை வழங்க அன்றைய முதல்வர் எம்ஜிஆர் வந்தார்.  80களின் பின்பகுதியில் காவிரி பிரச்னை தலைதூக்கி தண்ணீர் வரத்து குறைந்தது என நினைக்கிறேன். வருடம் முழுவதும் காவிரியில் நீர் வரத்து இருந்தது. 90களில்  தண்ணீர் வரத்து நின்றுபோய் காவிரி மணலில் கபடி / பாட்மிண்டன் போட்டிகள் நடந்த அவலம் நிகழ்ந்தது... இப்போது ஆடி 18க்கு மட்டும்  கரை புரண்டு ஓடுகிறது.    

@raajaleaks - நூல் இருக்கிறவன் ஐஐடில படிக்கிறான், நூல் இல்லாதவன் ஐடிஐல படிக்கிறான்.

@நா.சாத்தப்பன் - டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. கத்தாரின் பார்ஷிம் என்பவரும் இத்தாலியின் டம்பேரி என்பவரும் தங்கத்துக்காக கடுமையாகப் போராடினார்கள்.  இருவரும் 2.37 மீ உயரம் தாண்ட எஞ்சியவர்களால் முடியாமல் போனது. அதன்பின் இருவருக்கும் 2.37 மீயை விட உயரமாக வைத்து இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்க மூன்று முறையும் இருவராலும் தாண்ட முடியவில்லை.

இறுதியாக ஒரே ஒரு சான்ஸ் கொடுக்க இத்தாலி வீரர் டம்பேரி, ‘காலில் அடி... அதனால் வலி காரணமாக பின்வாங்குவதாக’ அறிவித்தார்.  ஆனால், கத்தார் வீரர் அதன்பின் செய்த செயல்தான் சிறப்பான தரமான சம்பவம்.  அவருக்கு தங்கம் உறுதியாகக் கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் போட்டியாளர்களிடம் ‘‘நானும் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்க, ‘‘இருவருக்கும் பகிர்ந்தளிப்போம்...’’ என்று பதில் வர... உடனே பார்ஷிம், தானும் பின்வாங்குவதாக அறிவித்தார்.  

எதிர் வீரரின் திறமையையும் விடாமுயற்சியையும் மதித்து அவரும் பரிசு பெறத் தகுதியானவரே என்று இப்படிச் செய்து தன் Sportsmanshipஐ நிரூபித்தார் கத்தார் வீரர் பார்ஷிம்.
இருவருக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் மிக அற்புதமான தருணங்களில் இதுவும் ஒன்று.

@sultan_Twitz - காங்கிரஸ் 70 ஆண்டுகளில் மக்களுக்கு செய்யாததை பாஜக 7 ஆண்டுகளில் செய்துள்ளது - அண்ணாமலை.அது அப்படி இல்ல ஆட்டுக்குட்டி... 700 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு இந்த 7ஆண்டுகளில் செஞ்சு விட்டிங்க..?!

@manipmp - சக மனிதரிடம் தவறாக நடந்துவிட்டு, கடவுளிடம் சரியாக நடந்து கொள்வது பலனற்றது.