அமராவதி அஜித்தை மட்டுமே தெரியும்! இயக்குநர் செல்வா
தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர் செல்வா. திரைத்துறையில் முப்பது வருடங்களாக நான்ஸ்டாப்பாக பயணித்து வருபவர். இவர் இயக்கிய ‘தலைவாசல்’ நூறு நாள் ஓடி இவருக்கான அடித்தளத்தை பலமாக அமைத்துக் கொடுத்தது. தமிழ் சினிமாவில் இப்போது வலிமையான நடிகராக வலம் வரும் அஜித் இவருடைய அறிமுகம் என்பது 2கே கிட்ஸுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ‘நாங்க’ படத்துக்குப் பிறகு ‘வணங்கா முடி’ செய்றீங்க. இந்தப் படத்துல என்ன அட்ராக்ஷன்?
இது ஹீரோ ஓரியண்ட்டட் சப்ஜெக்ட். ‘புதையல்’ படத்துக்குப் பிறகு நானும் அரவிந்த்சாமியும் சேர்ந்து பண்ற படம். ‘புதையல்’ படம் பண்ணும்போதே அவர் ரிச் கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் ‘புதையல்’ படத்தில் அரவிந்த்சாமி காமெடி ரோல் பண்ணினால் நல்லா இருக்கும்னு நடிக்கச் சொன்னேன். அது பேசப்பட்டது. ஹீரோஸ் பெரும்பாலும் Cop ரோல் பண்ணணும்னு ஆசைப்படுவாங்க. இதுல அரவிந்த்சாமி போலீஸ் அதிகாரியாக வர்றார். அதுல சில வித்தியாசம் காட்ட நினைத்தோம். வழக்கமான பார்முலாவில் இல்லாமல் அறிவை யூஸ் பண்ணி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதுதான் கதையோட கரு.
ஒரு போலீஸ் அதிகாரியின் இருபது வருட வாழ்க்கைதான் படம். அதை ஆறு எபிசோட்களாக பிரிச்சிருக்கேன். ஸ்கிரீன் ப்ளே ரொம்ப புதுசா இருக்கும்.அரவிந்த்சாமி படத்துக்குள் எப்படி வந்தார்?‘புதையல்’ படத்திலிருந்து அவருடனான நட்பை மெயின்டெயின் பண்றேன். நடுவுல சாரும் பிசினஸ் பக்கம் போயிட்டார். ‘கடல்’ படத்தில் என்ட்ரி கொடுத்தார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு அரவிந்த்சாமிக்கு வித்தியாசமான ஷேட் கிடைச்சது. அதிலிருந்து வித்தியாசமா அவரைக் காட்ட ஒரு கதை பண்ணினேன்.
அதுதான் ‘வணங்காமுடி’. கேரக்டர் பெயர் அன்பழகன். பலவிதமான கோணங்களில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர். சாரும் அதை அழகாக உள்வாங்கி பிரமாதப்படுத்தியிருக்கார். சாருக்கு ஜோடியா ரித்திகா சிங் வர்றாங்க.ஹோம் மேக்கருக்கான பெர்ஃபாமன்ஸை சிறப்பாக பண்ணியிருக்காங்க. மொழி தெரியாததால் வட இந்திய நடிகைகள் டெடிகேஷனுடன் நடிக்கிறார்கள்.
சிம்ரன் மேடத்துக்கு போலீஸ் அதிகாரி கேரக்டர். நந்திதாவும் போலீஸாக வர்றார். பத்திரிகையாளராக சாந்தினி வர்றார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் இருக்காங்க.
டெக்னிக்கல் டீம்ல யாரெல்லாம் இருக்காங்க?மியூசிக் இமான். மூன்று பாடல்கள் தரமாக வந்துருக்கு. இமானுடன் ஆரம்பத்துல இருந்து டிராவல் பண்ணுறேன். எனக்கு ‘நெஞ்சில் ஜில் ஜில்’, ‘ஆணை’, ‘முறியடி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ நான் அவன் இல்லை - 2’ உட்பட நிறைய படம் பண்ணியிருக்கிறார். என்னுடைய டேஸ்ட் இமானுக்கு நல்லாவே தெரியும். ஒளிப்பதிவு கோகுல் பினாய். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ராட்சசன்’, ‘மான்ஸ்டர்’ படங்கள் பண்ணியவர். விருதுகளை தட்டித்தூக்குமளவுக்கு விஷுவல் தூக்கலாக வந்திருக்கு. எடிட்டிங் ஆண்டனி. ஃபைட் சில்வா. நடனம் தர், தினேஷ். பாடல்கள் விவேகா, அருண்ராஜா காமராஜ்.
என்னுடைய படங்களில் டெக்னீஷியன்களுக்கான ஸ்பேஸ் இருக்கும். அதனால் எல்லாரும் அவங்களுடைய ‘தி பெஸ்ட்’ கொடுத்துள்ளார்கள். ‘வானம்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களைத் தயாரித்த கணேஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளீர்கள். இந்தப் பயணத்தை எப்படி ரீவைண்ட் பண்ணிப் பார்க்கிறீர்கள்? எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு பிடிச்ச துறையில இருக்கணும்னு ஒரு கனவு இருக்கும். அதுபோல் என்னுடைய கனவு சினிமாவாக இருந்தது. அது நல்லபடியாக நிறைவேறியது. அதுக்கு முதலாவதாக கடவுளுக்கு நன்றி. முப்பது வருடங்களாக சினிமாவுல இருக்கிறேன். சினிமாவில் பயணிக்க, வாய்ப்பு மிக முக்கியம். எனக்கு சரியான நேரத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. இன்னும் வாய்ப்புகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆரம்பத்துல ஒரு படைப்பாளி கனவோடும், கற்பனையோடும் வந்தாலும் ஆர்ட் ஃபார்ம் என்பது நாளடைவில் சர்வைவலுக்கானதாக மாறிவிடும். வாழ்க்கைக்காக மாறும்போது முழு திரைக் கலைஞனாக இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. இயக்குநர்கள் ஒருவிதமான சமரசத்துக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்.
‘அமராவதி’ அஜித், ‘வலிமை’ அஜித்-என்ன வித்தியாசம்?‘அமராவதி’ அஜித்தை எனக்கு நல்லா தெரியும்.மகனுக்கு திருமணம் முடித்துவிட்டீர்கள். வெற்றிகரமான உங்கள் வாழ்க்கை ரகசியம்? என்னுடையது அரேஞ்ஜ்டு மேரேஜ். மனைவி சில வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். மனைவி இல்லாத வலி இப்பவும் மனசுக்குள்ள இருக்கு. இப்போ அவருடைய ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறேன். மகனுக்கு சமீபத்தில் திருமணம் முடித்தேன். அடுத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கணும்.
குடும்பம் நல்லா இருக்கணும்னா விட்டுக்கொடுத்தல், புரிதல் இருக்கணும். இந்த இரண்டும் இருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும் வெவ்வேறு தேவைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. நான் சொல்லும் இந்த இரண்டு விஷயங்களும் இருந்தால் குடும்பத்தில் பிரச்னைக்கான வாய்ப்பு குறைவு. பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறீர்கள். ரஜினி, கமலை வைத்து இயக்கவில்லை என்ற ஏமாற்றம் இருக்கிறதா?
அப்படி எதுவும் இல்லை. ரஜினி சார், கமல் சார் இருவரையும் மீட் பண்ணியிருக்கிறேன். ஆனால், படம் பண்ணும் வாய்ப்பு அமையவில்லை.நீங்கள் மிஸ் பண்ணிய அல்லது ஸ்கிப் பண்ணிய ஹீரோ இருக்காங்களா?நான் யாரையும் அப்படி பண்ணியதில்லை. என்னுடைய ஹீரோக்கள் சொல்லியே பல படங்கள் பண்ணியிருக்கிறேன். புது தயாரிபப்பாளர் வரும்போது நியூ ஃபேஸ் இன்ட்ரோ பண்ணுவேன். சிபிராஜ், ஜீவன் அப்படி வந்தவங்கதான். ‘தலைவாசல்’ படத்தில் எஸ்.பி.பி.சார் தவிர மற்ற அனைவரும் நியூ ஃபேஸஸ். ‘அமராவதி’யில் அஜித், சங்கவி நியூ ஃபேஸஸ்.இப்போது சினிமா எப்படி இருக்கிறது?
எங்க டைம்ல நூத்துல பத்து பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். இப்போது நூற்றுக்கு ஐம்பது பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது லாங் டிராவல் இருந்தது. இப்போது சீக்கிரத்தில் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுகிறார்கள். சின்னத்திரை, வெப், எழுத்து, இயக்கம் - எது பிடிக்கும்?
சின்னத்திரை, எழுத்தாளர்களின் களம். வெப் சீரீஸ் படம் பண்ணுவது மாதிரி. எனக்கு ஃபேவரைட் என்றால் டைரக்ஷன் பண்ணுவது. விஷுவல்லை மக்களிடம் காட்ட வேண்டும் என்பது என்னுடைய தேர்வு.உங்கள் படங்களில் பிடித்தது?எந்தவிதத்தில் அந்தப் படங்கள் தனித்துவம் வாய்ந்தது?‘தலைவாசல்’, ‘பூவேலி’. மக்களுக்கும் எனக்குமான புரிதல் அந்தப் படங்களில் சரியாக இருந்தது.உங்கள் வாழ்க்கையில் மகத்தான தருணம்?ஒரே சமயத்துல நான் இயக்கிய மூன்று படங்களின் வேலைகள் நடந்தது. ஊட்டியில் ‘ரோஜாவனம்’, மைசூர்ல ‘மணிகண்டா’, சென்னையில் ‘உன் அருகில் நானிருந்தால்’.
எஸ்.ராஜா
|