மிமி
‘நெட்பிளிக்ஸி’ன் டிரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திப்படம், ‘மிமி’.அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் ஜான் - சம்மர். சம்மரால் குழந்தை பெற முடியாது. அதனால் ஜானும் சம்மரும் வாடகைத்தாயைத் தேடி ராஜஸ்தான் வருகின்றனர்.
இவர்களுக்கு பானு என்ற டாக்ஸி டிரைவர் கமிஷன் அடிப்படையில் உதவ முன்வருகிறார். நல்ல ஆரோக்கியத்துடனும் அழகாகவும் வாடகைத்தாய் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. வாடகைத்தாயாக இருப்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை தருவதாக அமெரிக்கத் தம்பதியினர் சொல்கின்றனர்.
பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு காணும் டான்ஸர் மிமி. அவளிடம் பணத்தாசை காட்டி வாடகைத்தாயாக இருக்க சம்மதிக்க வைக்கிறான் பானு. மிமி கர்ப்பமடைகிறாள். அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் நோய் இருக்கிறது என்று மருத்துவ அறிக்கை வர, ஜானும் சம்மரும் உடைந்துபோகின்றனர்.
அந்த குழந்தை வேண்டாம் என்று அமெரிக்காவுக்குப் பறந்துவிடுகின்றனர். இதற்குப் பிறகு மிமியும், அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் என்னவாகின்றனர் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. ‘Mala Aai Vhhaychy!’ என்ற மராத்திப் படத்தை ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் லக்ஷ்மண் உடேகர்.
|