வலைப்பேச்சு



@luckykrishna -
எம்ஜிஆரின் வீரம் நம்பியாரிடம்தான் செல்லுபடியானது.
இந்திராவுக்கு பயந்து இருபது
அம்ச திட்டத்துக்கெல்லாம் காவடி
தூக்கினார் என்பது வரலாறு. கூட காவடி
தூக்கிய இரு வீரர்கள் ஜெயகாந்தனும்,
கண்ணதாசனும். ரத்தத்தின் ரத்தங்கள்
இப்போ சூடாகி என்ன சார்
பிரயோஜனம்?

@HariprabuGuru -
காதலிக்கப்படுறதுக்கு எல்லாம் நிறைய
திறமையும், லக்கும் தேவைப்படும்போலருக்கு. ரெண்டுமே இல்லாத
நானெல்லாம்...

@kusumbuonly - ரோட்டுக்கடைகளில் நாம போயி சாப்பிட்டுவிட்டு என்னென்ன சாப்பிட்டோம் என்று நாம் சொல்வதுதான் கணக்கு. ஹோட்டல்களில் பில் எடுத்துட்டு
வர தாமதம் ஆகி என்ன சாப்பிட்டோம் என்று நாம் போய் சொன்னாலும் சர்வர்கிட்ட கேட்டு கன்ஃபார்ம் செஞ்சிட்டுதான் பில் போடுவாங்க. சகமனுசன் மேல் எளியவர்களின்
நம்பிக்கை.

@naaraju - சென்ற தலைமுறை IT அங்கிள்கள், லேப்டாப் பைக்குள்ள வச்சு Pantry பொருட்களைக் கடத்துனதைப் பார்த்துதான் இந்தத் தலைமுறை ITல Pantry’ன்ற
ஒரு இடமே இல்லாம இருக்குன்னு
பேசிக்கிறாய்ங்களே... Is it true..?

@Kozhiyaar - PT periodஐ மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்குவதால்தான் ஒலிம்பிக்ஸ் மெடல் கிடைக்கலைனு சொல்றாங்க. ஆனா, அப்படி பார்த்தா எல்லோரும்
பெரும் படிப்பு படித்தவர்களாகத்தானே இருக்கணும்!?

@Bhagath Veera Arun - பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியாகி வரவேற்பு, அதீத வரவேற்பு, விமர்சனம் என பலவித கருத்துப் பரிமாற்றங்களை பார்க்க முடிகின்றது. படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து சினிமா வல்லுனர்கள் பேசட்டும். என்னைப் பொறுத்தவரை மெட்ராஸ் பாக்சிங் பரம்பரை, எமர்ஜென்சி அரசியல், சமூக அரசியல் என நிறைய விவாதிக்க இருக்கின்றது.

பெரும்பாலான நண்பர்கள் தலித் அரசியல் - கலை - விளையாட்டு சார்ந்து இப்படத்தை அணுகுகிறார்கள். இப்பின்னணியில் ‘சார்பட்டா பரம்பரை’ குறித்த உண்மை வரலாறு பற்றிய தேடலும் விவாதமும் அவசியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

‘சார்பட்டா’ உண்மையில் யார் அடையாளம்?

சார்பட்டா பெயருக்கான பொருளை அறிய பலரும் முற்படுகின்றனர். சரியான விளக்கத்தை கண்டடைய முடியவில்லை. ஆனால், அது யாரை பிரதிநிதித்துவப் படுத்துகின்றது என்பது கேள்வியானால் நிறைவான பதிலைக் கண்டடையலாம். மெட்ராஸ் குத்துச்சண்டை களத்தில் கோலோச்சிய சார்பட்டா பரம்பரையில் பல சமுதாயத்தைச் சார்ந்த வீரர்கள் இருந்தாலும், வீழ்த்த முடியாத வீரர்களாக நீண்டகாலம் களத்தில் நின்றவர்கள் பெரும்பாலும் மீனவர்கள்தான். சார்பட்டா பரம்பரையின் மையம் இராயபுரம், பனைமரத்தொட்டி பகுதிதான். இன்றும் சென்னை பாக்சிங் வட்டாரத்தில் சார்பட்டா என்றால் அது மீனவர் கோதா என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று.  

மெட்ராஸ் பாக்சர்களில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் ஆங்கிலோ இந்திய வீரரான நாட்டெர்ரி. அவரது ஸ்டைல், கால் அசைவு (footwork), நுணுக்கமான சண்டைக்கு பெயர் பெற்றவர் டெர்ரி.  ஆங்கிலோ இந்தியன் வீரரான டெர்ரியை முதன்முதலில் வீழ்த்தியவர் கித்தேரி முத்து எனும் மீனவர். முத்துவின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டி  ஆல்பர்ட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ‘திராவிட வீரன்’ என்ற பட்டத்தை தந்தை  பெரியார் அவருக்கு சூட்டினார். அறிஞர் அண்ணா கித்தேரி முத்துவை வாழ்த்திப் பேசினார்.

சார்பட்டா பரம்பரையில் அதிக புகழ்பெற்றவராக கித்தேரி முத்து இருந்தார். எம்.ஆர். ராதா, பாரதிதாசன் போன்றவர்கள் கித்தேரி முத்துவை நேரில் வந்து சந்திப்பார்களாம். இருவரும் குத்துச்சண்டை ரசிகர்கள் என்பதால் கித்தேரி முத்துவிடம் நல்ல நட்பினைக் கொண்டிருந்தனர் என்ற தகவலை புலவர் பா.வீரமணி பதிவு செய்திருக்கிறார். கித்தேரிமுத்துவுக்குப் பிறகு மீண்டும் டெர்ரியை வீழத்தியது ஜென்டில்மேன் பாக்சர் என்று பெயர் பெற்ற ‘டாமிகன்’ சுந்தர்ராஜன் அவர்கள்.  அவரது சந்ததியினர் இப்போதும் ராயபுரம் பகுதியில் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகின்றனர். அதே போன்று கித்தேரி முத்து அவர்களின் மகன்கள் அன்புமுத்து, அருமைமுத்து ஆகியோர் காசிமேடு ஜீவா நகர் பகுதியில் boxing club வைத்திருந்தனர்.

சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற மற்றொரு பாக்சர் ஆறுமுகம் அவர்கள். தான், பங்கேற்ற 120 போட்டிகளில் 100 போட்டிகளில் நாக்அவுட் செய்து சாதனை படைத்தவர். இவரைத் தொடர்ந்து பாக்சர் வடிவேல், செல்வராஜ் என சார்பட்டா பரம்பரையில் பங்களிப்பு செலுத்திய மீனவர்களின் பட்டியல் மிக நீளம். உலக குத்துச் சண்டை வீரர் முகமது அலி சென்னை வந்தபோது நேரு ஸ்டேடியத்தில் நடந்த காட்சிப் போட்டியில் அவருடன் மேடை ஏறி சண்டையிட்டவரும் பனைமரத்தொட்டியைச் சார்ந்த  பாக்சர் பாபு என்ற மீனவர்தான்.

மீனவர்களைத் தவிர்த்து பிற சமுதாயத்தினரும் சார்பட்டா பரம்பரையில் பங்களித்துள்ளனர். அதில் முக்கியமானவர் அருணாச்சலம், மாசி, ஜெயவேல் போன்றவர்கள். சார்பட்டா பரம்பரையிலேயே Dancing ஏழுமலை என்ற தரமான பாக்சர் இருந்துள்ளார். இப்போதும் ராயபுரம், சென்னை துறைமுகம் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் பலரும் பாக்சர்
அருணாச்சலம் அவர்களைப் பற்றி பேசக் கேட்கலாம். தலித் சமுதாயத்தில் இருந்து சார்பட்டா பரம்பரையில் புகழ்பெற்ற வீரர்களில் அருணாச்சலம், அந்தோணி ஜோசப் போன்றவர்கள் முதன்மையானவர்கள்.  

ஆங்கிலோ இந்திய குத்துச்சண்டை வீரரான நாட்டெர்ரியுடன் நடந்த போட்டியில் மேடையிலேயே அருணாச்சலம் அவர்கள் உயிரிழந்தார். அவரது வீர மரணத்திற்கு இரண்டு மாதங்கள் கழித்து டெர்ரியை கித்தேரி முத்து வீழ்த்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகுதான் கித்தேரி முத்து மிகப் பிரபலம் அடைந்தார். இப்படி சார்பட்டா பரம்பரை மீனவர்களின் அடையாளமாக இருக்கையில், அப்பெயரிலேயே வரும் படத்தில் ஏன் முறையாகப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி நியாயமானது அல்லவா?

படத்தில் ரங்கனை தணிகா சிறுமைப்படுத்தும்போது, ‘‘வாத்தியார் எப்பேர்ப்பட்ட ஆளு தெரியுமா. டெர்ரியையே நாக்அவுட் பண்ணி பரம்பரை மானத்தை காப்பாத்துனாரு...’’ என்று கபிலன் தனது வாத்தியார் ரங்கனின் பெருமையைச் சொல்லி பொங்கி எழுவார். உண்மை வரலாற்றில் டெர்ரியை வீழத்தியது ராயபுரத்தைச் சார்ந்த கித்தேரி முத்து எனும்போது அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?  

மற்றொரு காட்சியில்  வரும் பெயர்ப் பலகையில் ‘சார்பட்டா பரம்பரை வாத்தியார் திராவிட வீரன் வியாசர்பாடி ரங்கன்’ என எழுதப்பட்டு இருக்கும். திராவிட வீரன் என்ற பட்டத்தை சரியாகக் குறிப்பிட்டு இருக்கும்போது, இராயபுரம் என்று குறிப்பிடாமல் வியாசர்பாடி என்று குறிப்பிட வேண்டிய காரணம் என்ன? இராயபுரம் என்று சொன்னால் அது மீனவரைக் குறிக்கும் என்பதாலா?

சார்பட்டா பரம்பரை செயல்பட்ட காலம் முதல் அதில் முக்கிய பங்களிப்பு செலுத்திய மீனவர்களை அடையாளமற்று விலக்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன?
படத்தில் வரும் பீடி ராயப்பன் கதாபாத்திரத்தைக் கூட சார்பட்டா பரம்பரைக்கு தொடர்பே இல்லாமல் ஏதோ  கடலிலேயே வாழ்பவர் போல காட்டியுள்ளனர். அவரை சார்பட்டா பரம்பரையோடு இணைக்கவில்லை.  

நாயகனுக்கு எதிர் போட்டியாளராக இருக்கும் ‘இடியப்ப பரம்பரை’யின் உண்மைப் பெயர் ‘இடியப்ப நாயக்கர் பரம்பரை’. மற்றொரு புகழ்பெற்ற பரம்பரை ‘எல்லப்பச்செட்டி பரம்பரை’.
சினிமா வெகுஜன ஊடகம் என்பதால் எதிர்வரும் பிரச்னைகளைத் தவிர்க்க சாதிப்  பெயர்களை தவிர்த்திருக்கிறார் என்று புரிந்துகொள்வோம். மறுபுறம், கதாநாயகன் கபிலனின் சாதிய பின்புலத்தை மட்டும் சரியாக அடையாளப்படுத்தத் தவறவில்லை. தலித் மக்கள் சார்ந்த கதை சொல்லல்தான் பா.இரஞ்சித்தின் பாணி என்பது தெளிவு.

ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக கபிலனின் வெற்றியைப் பதிவு செய்யவேண்டும் என்ற இயக்குநரின்  மெனக்கெடல் ஏற்புடையது. அது அவருடைய இலக்கு. ஆனால், புறந்தள்ளப்பட்ட இனத்தின் சாதனை வரலாற்றை மறைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்..? அதை முறையாகப் பதிவு செய்வதின் மூலம் இயக்குநர் எதை இழந்துவிடப்போகிறார்..?  
அரசியல் பிரதிநிதித்துவம், சமூக அரசியல் அணி திரட்டல், கலை - இலக்கிய செயல்பாடுகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் பின்தங்கி இருக்கும் மீனவ சமூகத்தின் அடையாளத்தைத் திரிக்கவோ புறக்கணிக்கவோ வேண்டிய அவசியம் என்ன?

@JamesStanly - ஜீ... உங்கள ஏன் பாக்க வந்தோம்னா...அதெல்லாம் நீங்க உங்களுக்குள்ள போன் பேசுறப்பவே கேட்டாச்சி..! புதுசா எதாவது இருந்தா சொல்லு...

@Nathan_Thozhar - கனடா Global Health Research ஆய்வின்படி இந்தியாவின் கோவிட் மரணம் 27 முதல் 34 இலட்சம் வரை இருக்கும். அரசின் அதிகாரபூர்வ கணக்கு ஜூலை 2021 வரை 4,21,000 மட்டும்தான். மக்கள் மரணத்தை பதிவு செய்யக் கூட வழியில்லாத நாடு இது!

@ItsJokker - ஊர்ல இருக்கிற எல்லாரையும் அடிக்கிற அளவுக்கு நீ பெரிய ரவுடியா இருக்கலாம்... ஆனா, உனக்கு வர்ற பொண்டாட்டிய சமாளிக்குற அளவுக்கு நீ பெரிய ஆள் கிடையாது..!

@rmuthukumar - ‘இது யாரு தந்த வண்டி... எம்ஜியாரு தந்த வண்டி’ என்று  ‘ரிக்‌ஷா மாமா’ படத்தில் பாடுவார் சத்யராஜ். உண்மையில் கை ரிக்‌ஷாவை ஒழித்து, சைக்கிள் ரிக்‌ஷா தந்தவர் கருணாநிதிதானே!

@sultan_Twitz - இங்கு தரமான டிவி கவர்கள் கிடைக்கும்..!

@mayirepochu1 - தியேட்டர் விரைவில் திறந்தால் திரையுலகம் பயன்பெறும். திறந்தால் டிக்கெட், பார்க்கிங் கட்டணம்,கேண்டீனில் தின்பண்டங்களை அநியாய விலைக்கு விற்பது என்று கொள்ளையடிப்பதை நிறுத்தினால் தியேட்டர்காரர்களுக்கு எதிர்காலம் உண்டு. இல்லையேல் OTT-யில் படம் பார்த்துவிட்டு டாட்டாதான் தியேட்டருக்கு

@Varavanaisen - முதலில் இரண்டு பெண்கள் அதிமுகவை வைத்து இருந்தனர் - இப்போது இரண்டு ஆண்கள்!
எப்போதுமே டபுள் டமாக்காதான்!

@sultan_Twitz - அதிமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை. தில்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி - செய்தி.
ஏன்... இதை தில்லில போயிதான் சொல்லணுமா..? தமிழ்நாட்டுல சொன்னா ஏத்துக்கமாட்டாங்களா..?!

@thoatta - 4.5 வருச ஆட்சியோட ரிமோட் மட்டுமில்ல, இவங்க டிவி ரிமோட் கூட பாஜகதான் வச்சிருக்கும் போல!