மாஸ்க் கவுன்!



இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஃபேஷன் டிசைனர், டாம் சில்வர்வுட். கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்த கொரோனாவின் கொடுமைகளைப் பிரதி பலிக்கும் விதமாக ஓர் ஆடையை டிசைன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் அவர். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் ‘மாஸ்க் அணிவது கட்டாயமில்லை. ஆனால், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்’ என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு டாமின் மனதுக்குள் ஒரு ஐடியாவைத் தோற்றுவித்தது. ஆம்; மாஸ்க்கை வைத்தே ஆடையை டிசைன் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார். கிட்டத்தட்ட 1,500 மாஸ்க்குகளை மறுசுழற்சி செய்து மணப்பெண் அணிகிற ஒரு கவுனை டிசைன் செய்திருக்கிறார் டான். இதற்காக இரவு, பகல் பாராமல் பத்து நாட்கள் உழைத்திருக்கிறார். மற்ற ஆடைகளுடன் ஒப்பிடும்போது இதற்கு செலவு குறைவு. லண்டனில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தின் முன்பு, இந்த மாஸ்க் கவுனை அணிந்து, மாடல் ஜெமிமா ஹம்ப்ரா போஸ் கொடுக்க வைரலாகிவிட்டது டாமின் டிசைன்.  

த.சக்திவேல்