ஜீவாவுக்கு ஜோடியாகும் அமலா...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



             
                 கோயம்பேடு மார்க்கெட்ல இருக்கிற பிரமாண்டமான தண்ணீர் டேங்க் மேல வச்சு ‘நண்பனு’க்கான பாடலையும், சில காட்சி களையும் போன வாரம் எடுத்தார் ஷங்கர். ஷங்கரோட பிரமாண்ட ஸ்டைல்ல டேங்க் மேலநூறு பேருக்கும் மேல கூட்டம்..!

‘தெய்வத்திருமகள்’ இங்கே ரிலீசாகிற அதேநாள் தெலுங்குலயும் ‘நானா’ன்னு ரிலீசாகுது. அதே நாள்ல ‘மைனா’வோட தெலுங்கு டப்பிங் படமும் ரிலீசாகுது. ஸோ, அமலாபாலுக்கு ஒரே நாள்ல ரெண்டு ரிலீஸ். ஒரே கல்ல ரெண்டு மாங்கா... அதுவும் குண்டு மாங்கா..!

‘ஈ’ல நடிச்ச ஜீவாவையும், ‘பேராண்மை’ல நடிச்ச ஜெயம் ரவியையும் வச்சு ஒரு படத்தை ஜனநாதன் டைரக்ட் பண்ணப்
போறார். ‘ஜே ஜே ஜே’ன்னு வருமா படம்..?

ஜீவாவையும், அமலா பாலையும் வச்சு இன்னொரு நியூஸ். மிஷ்கினோட ‘முகமூடி’யில நடிக்கப்போற ஜீவாவுக்கு அமலா
பால்தான் ஜோடியாம். இன்ட்ரஸ்டிங்..!

‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’ன்னு லிங்குசாமி தயாரிக்கிற மூணு படங்களையும் ‘யு டிவி’ இணைஞ்சு தயாரிக்கறாங்க. ஸோ, கவலையில்லாம வேலையைப் பார்க்கலாம் லிங்கு...

ன்கூட நடிக்க விரும்பாத நடிகைகள் லிஸ்ட்டை வெளியிட்டார் ‘கருங்காலி’யை இயக்கி நடிக்கிற களஞ்சியம். அதுல சினேகா, மீரா ஜாஸ்மின், பூமிகா, பத்மப்ரியாவெல்லாம் இருக்காங்க. ஆனா ஒத்துக்கிட்டு நடிச்ச அஞ்சலியை பாராட்டலாமே..?

‘குட்டி’க்காக தேசிய விருது வாங்கிய டைரக்டர் ஜானகி விஸ்வநாதன் இப்ப ‘ஓம் ஒபாமா’ங்கிற படத்தை எடுத்திருக்காங்க.

‘தேநீர் விடுதி’ ரேஷ்மி மேனன் நடிச்சிருக்க இந்தப்பட டைட்டிலே சொல்லும் இது ஒரு காமெடிப் படம்னு..!

ரசு மாணவர்கள் விடுதிப் பிரச்னையை முன்வச்ச ‘அரும்பு மீசை குறும்பு பார்வை’ பட நாயகி ஹாசினிக்கு பாராட்டுகள்
குவிஞ்சும், பணம் குவியாததால... இனி பேர் சொல்லும் டைரக்டர்கள் படங்களை எதிர்பாத்துக்கிட்டிருக்கு பொண்ணு..!

ட்டுக்கோட்டையாரின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் பாட்டெழுதறதைக் கேள்விப்பட்டு அவரைத் தன் ‘ஒத்தவீடு’ படத்தில பாட்டெழுத வச்சிருக்கார் அறிமுக இயக்குநர் பாலு மலர்வண்ணன்.

சைலன்ஸ்

ரெல்லாம் கிசுகிசுத்தும், ‘‘அதெல்லாம் எங்களுக்குள்ள ஒண்ணும் இல்லை...’’ன்னு மறுத்துக்கிட்டிருந்த ஆறடி உயர
‘அ..கா’வுக்கும், ‘வானம்’ போல மனம் படைச்ச டைரக்டருக்குமான உறவு நீடிச்சுக்கிட்டேதான் இருக்காம். போன வாரம் ஒரு நிகழ்ச்சிக்காக ஜோடி போட்டு சென்னை வந்த ரெண்டு பேரும், நட்சத்திர ஹோட்டல்ல ஒண்ணாவே தங்கியிருக்காங்க... எதையும் லைசன்ஸ் வாங்கிட்டு பண்ணலாம்ல..?

‘அவனா’ நடிச்ச அண்ணனுக்கும், அவரோட அண்ணனுக்கும் யார் கண் பட்டுதோ... சமீபகாலமா ரொம்பவே புகைச்சலாம். ‘தம்பி நடிக்க, அண்ணன் தயாரிக்க’ன்னு நல்லாவே போய்க்கிட்டிருந்த உறவு இப்ப சிக்கலுக்குள்ளாகவே... சீக்கிரமே தொழில் உறவு பிரியலாம்ங்குது கோலிவுட் பட்சி. ‘ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்’னு நம்புவோம்..!
 கோலிவுட் கோயிந்து