இன்டர்வியூவில் உண்மை சொன்னால்...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


                       கேள்வி: உங்க தனித் திறமை என்ன?

பதில்: எத்தனை பெண்கள் கூட்டமாக வந்தாலும், ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக வர்ணிக்க முடியும்!

கேள்வி: எங்க நிறுவனத்துல வேலை பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறீங்க?

பதில்: வேற யாரும் ஏமாறலே. அதோட, இங்கதான் நிறைய அழகான பொண்ணுங்க வேலை பாக்கறாங்களாம்!

கேள்வி: சம்பளம் எவ்வளவு எதிர்பாக்கறீங்க?

பதில்: ஆக்சுவலா டீ செலவுக்குக் கொடுத்தாலே போதும். ஆனா, ‘முப்பதாயிரம்’னு பந்தா பண்ணுவேன்!

கேள்வி: இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்துல உங்க சாதனை என்ன?

பதில்: தண்ணி போட்டுட்டு அதிகாரிகளை ஓட ஓட விரட்டி அடிச்சது!

கேள்வி: இதற்கு முன் பார்த்த வேலையை ஏன் விட்டீங்க?

பதில்: ‘வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலை பாருங்க’ன்னு சொன்னாங்க!

கேள்வி: இங்க நீங்க எதிர்பார்க்கிற வசதி என்ன?

பதில்: ஹி... ஹி... சூப்பர் குட்டி எனக்கு பி.ஏ.வா வேணும்!

கேள்வி: குண்டு பல்பினுள் உள்ள இழை எதனால் ஆனது?

பதில்: ஹும். டியூப்லைட் கேக்கற கேள்வியைப் பார்!

கேள்வி: தமிழ்த் தாத்தா என்ற சிறப்பிற்கு உரியவர் யார்?

பதில்: எங்க தாத்தாவைப் பத்தியே எனக்குத் தெரியாது!

கேள்வி: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் என்ன?

பதில்: தமன்னா பிறந்தநாள்தான் தெரியும்!

கேள்வி: சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவீங்களா?

பதில்: முதல் நாள் நைட் மப்பு ஓவரா ஆகாம இருந்தா!

கேள்வி: அடிக்கடி லீவு எடுப்பீங்களா?

பதில்: வாரத்துக்கு நாலு நாட்கள் மட்டும்!

கேள்வி: உங்களுக்கு வேலை இல்லேன்னு சொன்னால்?

பதில்: வெளிய வருவீங்க இல்ல?!

கேள்வி: உங்க பலவீனம் என்ன?

பதில்: உங்க பொண்ணு!

கேள்வி: படிக்கும்போது எந்த விளையாட்டுல ஆர்வம் அதிகம்?

பதில்: மூணு சீட்டு விளையாடறதுல!

கேள்வி: உங்க லட்சியம்?

பதில்: உங்களை இதே மாதிரி நிக்க வச்சு நான் கேள்வி கேக்கணும்!