வலைப்பேச்சு
@thiruja - பாஜகவின் முன்னாள் மராத்திய முதல்வர் பட்னாவிஸ் ரூ.4.5 கோடி மதிப்பிலான கொரோனா சிகிச்சைக்கான மருந்தை வாங்கி பதுக்கிய விவரம் வெளியாகியிருக்கிறது. வழக்கு பதிவாக இருப்பதாக தகவல்.கும்பமேளா, மருந்து பதுக்கல், தடுப்பூசி - ஆக்சிஐன் பற்றாக்குறை, இறப்பு எண்ணிக்கை... ஆகியவற்றை மறைப்பதே மோடியின் சாதனை. @SundarrajanG - வரலாறு படைக்கவுள்ளார் கிரிஜா வைத்தியநாதன். தான், தலைமைச் செயலராக இருந்தபோது போடப்பட்ட உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, தானே இப்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிபுணத்துவ உறுப்பினராக விசாரிக்கப் போகிறார். வரலாறு படையுங்கள் கிரிஜா!
@SadhaaAzhagiri - தமிழக மருத்துவக் கட்டமைப்பின் வெற்றியைப் பற்றி பெருமை கொள்ளவும் முடியவில்லை. குஜராத்தின் மருத்துவக் கட்டமைப்பின் சீர்கேடுகளைப் பற்றி விமர்சிக்கவும் முடியவில்லை. இப்படித்தான் காலம் இந்த so called நடுநிலையாளர்களின் குறுக்குப் புத்தியை அம்மணமாக்கி அலையவிட்டிருக்கிறது.
@Thaadikkaran - அப்பறமென்னப்பா... டாஸ்மாக் எல்லாத்தையும் கொரோனா வார்டா மாத்திறலாமா, அங்கதான் கொரோனா வராதே...
@Ram Vasanth - முன்னாடி எல்லாம் இந்த இடத்துலதான் ராத்திரி 12 மணி ஆனா தண்ணிய போட்டுட்டு நிறைய ஆளுங்க இலக்கிய சண்டை போட்டாங்க!
@Surya_BornToWin - ஒரு மாநிலம் எப்படி இருக்கவே கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக குஜராத்தையும் உத்திரப் பிரதேசத்தையும் காட்டிக் கொடுத்திருக்கிறது கொரோனா.
@ItsJokker - ஏண்டா MRI & CT Scan கூட இல்லாத ஹாஸ்பிட்டல்ஸ வச்சிக்கிட்டா, தமிழ்நாட்டுல மருத்துவ வசதி சரியில்லை, டாக்டர்கள் சரியில்லைன்னு சொல்லிட்டு இருந்தீங்க!
@narsimp - ஸ்க்ரீன்ல ஆம்பளைங்க மட்டும்தான இருக்காங்கன்னோ லேடீஸ் மட்டும்தான இருக்காங்கன்னோ ஃப்ரீயா ஹால்ல பாக்க முடியுதா? சடால்படார்னு பாய்ஞ்சுர்றானுங்க... அடேய் OTT!
@vinothpaper - தொழில் பண்றவங்க எல்லாம் வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்காங்க. எதிர் வரும் 3 மாசத்த எப்படி சமாளிக்கிறதுனு ஒண்ணும் புரியல. அதுவும் கடந்த வருடம் புதுசா தொழில் ஆரம்பிச்சவங்க நிலைமை ரொம்ப மோசம். அந்த கடவுள்தான் காப்பாத்தணும்...
@DrRajes39806123 - குறைந்த பட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்கு உரு மாறிய கொரோனாவின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருக்குமென்று மருத்துவர்கள் நம்புகின்றோம். மீண்டும் ஒரு கொடுமையான காலத்தைக் கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது. நண்பர்களே... தயவுசெய்து மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.
@shivaas_twitz - ஒரு நாளைக்கு 2 லட்சம் கேஸுக்கு மேல வரும் போது தேர்தல் பிரசார பேரணி நடத்தலாம், கும்பமேளா நடத்தலாம்னா, எதுக்குயா ஒரு லட்சம் கேஸ் வந்தப்போ தக்காளி வாங்கப் போனவனை லத்தியால அடிச்சி, கேரம் போர்டு விளையாண்டவனை ட்ரோன் கேமரா வச்சி விரட்டி, யூ டர்ன் போட்டு டேபிளை உடைச்சி... இதெல்லாம் செய்தீங்க..?
@drkvm - கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டியது, ஆக்ஸிஜன் தேவையை சமாளிக்க வேண்டியது மாநிலங்களின் பொறுப்பு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.GST collection மட்டும் உங்க பொறுப்பு... அதான..!
@mekalapugazh - கொரோனா சொல்லிச் சென்றது... 1. வழிபாட்டிடங்கள் வெறுமனே வணிக நிறுவனங்களே. 2. மைதானத்துக்கு வருபவர்களுக்காகக் கிரிக்கெட் ஆடப்படுவதில்லை. 3. தமிழகக் கட்டமைப்பு இந்தியாவுக்கே முன்மாதிரி. 4. மத அரசியல் பீடித்துவிட்டால் மனித உயிரை மதிக்காது. 5. அறிவியல் பார்வையில்லையெனில் அழிவு அதிகம்.
@minimeens - நைட்ல மட்டும் வர்றதுக்கு... நிலாவா நானு..?
@mohanramko - ஒவ்வொரு அமைதியான கணவனுக்குப் பின்னாடியும், ஒரு பேசும் மனைவி உட்கார்ந்து இருக்காங்க, டூவீலர்ல...
@kumarfaculty - ஊர் ஒன்றுபட்டால் கொரோனாவுக்குக் கொண்டாட்டம்...
@manipmp - ஜீரோவையும் ஜீரோ பேலன்சையும் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்களே!
@thoatta - குஜராத்ல கொரோனா பேஷண்டே கொரோனா டெஸ்ட் எடுக்கிறாராம்... போவியா...
@kobikashok - கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18 முதல் 19 மணி நேரம் வரை பணியாற்றுகிறார் - அமைச்சர் பியூஷ் கோயல். இது என்னடா புது புரளியா இருக்கு..!
@Ramanujam Govindan - தடுப்பூசிகள் பற்றிக் கேள்வி கேட்பதில் தவறில்லை. வெளிப்படையாக விளக்கவேண்டியது சார்ந்தோர் கடமை. தடுப்பூசி என்பது செயலிழக்கப்பட்ட வைரஸ்தான்.கொரோனா வைரஸால் நூற்றில் ஒருவருக்கு இறப்பு போன்ற பாதிப்பு வரும் என்றால் தடுப்பூசியால் லட்சத்தில் ஒருவருக்கு தீவிர பாதிப்பு வரத்தான் செய்யும். இந்த ஒரு மிகச்சிறிய ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரிஸ்க்கை எடுக்கத்தான் வேண்டும்.
தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்குக் கொரோனா தொற்று வந்து மரணம் வருவதும் மிக மிகக் குறைவானதே. தடுப்பூசி போடாமல் இருந்தால் இருக்கும் ரிஸ்க்கைவிட தடுப்பூசி போடுவதில் உள்ள ரிஸ்க் மிக மிகக் குறைவானதே!மேலும் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் சிலருக்கு தற்செயலாக தடுப்பூசி போட்ட அன்று பிற உடல் உபாதைகளால் மரணம் ஏற்பட்டிருக்கலாம். லட்சக்கணக்கானோர் போட்டுக் கொள்ளும்போது இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது. கொரோனா வைரஸ் மரணங்களிலும் இப்படித்தான்.
முதன் முதலில் தடுப்பூசிகள் வந்தபோது சில மருத்துவர்களே தயங்கினார்கள். பல செவிலியர்கள் தயங்கினார்கள். அந்த பயம் நியாயமானதே. ஆனாலும் வேறு வழியில்லாமல் முதல் நாளன்றே பல மருத்துவர்கள் போட்டுக் கொண்டனர். நானும் முதல் நாளே போட்டுக் கொண்டேன். நாம்தான் சில ரிஸ்க் எடுத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால். யாராவது முன்வந்துதானே ஆகவேண்டும்.
இதுவரை தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர். மரணம் உட்பட சீரியஸான பக்க விளைவுகள் ஒரு சிலருக்கே. அவர்களுக்கு அது மிகப் பெரிய விஷயம்தான். அந்த சோகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் எதிர்மறை செய்திகள் மட்டுமே முக்கியத்துவம் பெறும். அவற்றையே பார்த்துப்பார்த்து நமக்கு எதன்மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.ஆக, தடுப்பூசி மிகவும் அவசியம்.
@mohanramko - மூக்கு பெருசா இருக்கிறதால, அதிகமா ஆக்சிஜன் உள்ளே போகுதாம், அதனால பஞ்சு வச்சு கொஞ்சமா போற மாதிரி தடுத்து இருக்காங்க....
@GreeseDabba2 - சென்ற ஆண்டு எப்படி கொரோனா சவாலை துணிச்சலாக எதிர்கொண்டோமோ அதே போல இந்த வருடமும் எதிர் கொள்ள தயாராக உள்ளோம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்.ஆ! அதே எவர்சில்வர் தட்டு, மணி அடிக்கறது, விளக்கு ஏத்தறதா..?
@Rk Rudhran - தமிழ்நாட்டின் மூத்த மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனன் - அந்த அம்மாவுக்கு 99 வயது. மூன்று நாட்களுக்கு முன், தொலைபேசியில் அழைத்தார்கள். இன்று என்னுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஒரு project பற்றி விரிவாகப் பேசினார்கள். இந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல.
நாங்கள் இருவரும் (படம் எடுத்த உமாவைச் சேர்த்து அறையிலிருந்த மூவரும்) கோவிட் தடுப்பூசி (covishield) இரண்டு முறை போட்டுக் கொண்டவர்கள் என்பதைத் தெரிவிக்கத்தான்.முகக்கவசத்தை உமா படம் எடுக்க ஆரம்பித்தவுடன்தான் இறக்கினோம். Wear mask, get vaccinated.
@Raajavijeyan - ஏன் ணே அவனை அடிக்கிறிங்க..? ஊரடங்கு போட்டாச்சு. போன வருஷம் ரேஷன் கடையில 1000 ரூபா கொடுத்தாங்களே... இப்ப எவ்வளவு தருவாங்கன்னு கேட்குறான்பா!
@prabhu65290 - ஆக்சிஜன் சிலிண்டர் இல்லனு சொன்னாங்க... குஜராத் கவர்ன்மென்ட்: மரத்தடில படுக்க வெக்க சொல்லி இருக்கேன்.மரத்துல இருந்து ஆக்சிஜன் வரும்தானே..!
@balebalu - கொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார் - ரயில்வே துறை. போன தடவை ஏற்பாடு செய்ததாக சொல்லப்பட்டபோதே யாரும் அங்கு சிகிச்சை எடுத்ததாக தகவல் இல்லையே!
@mangudiganesh - ‘கோயில்களுக்கு செலவிடும் தொகையை மருத்துவமனைகளுக்கு கொடுங்கள்...’னு நடிகை ஜோதிகா பேசியதும்... வெறிநாய் போல குரைத்த முட்டாள் கூட்டம் எங்கே..?
@Meenakshi Sundaram - 5 ட்ரில்லியன் டாலர் எகானமியை நம்பி ஏமாந்ததில் ஒருவர்...ஞானமும் தியானமும்.!
@Ezhumalai Venkatesan - தடுப்பூசி போடுவதில் வயது நிர்ணயத்தை தளர்த்துங்கள்; மாநில அரசுகளே தடுப்பூசி கொள்முதல் செய்ய அனுமதியுங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பிரதமருக்கு யோசனை சொல்லி கடிதம் எழுதியபோது அவரை பக்தாஸ் ‘Why Manmohan Singh crying’ என்றெல்லாம் வறுத்தெடுத்தார்கள்.
இன்னும் ஒருபடி மேலே போய் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்,முன்னாள் பிரதமர் என்றும் பாராமல் மேலும் கேவலமான வகையில் அரசியல் சாக்கடைப் புத்தியை எல்லாம் கலந்து பதில் கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் பாருங்கள், சில மணி நேரங்களிலேயே மாற்றம். இப்போது 18 வயது முடிந்தவர்களுக்கும் தடுப்பூசி; தடுப்பூசி நேரடி கொள்முதலில் மாநிலங்களுக்கும் அதிகாரம் என்று மோடி அண்ட் கோ இறங்கிவந்திருக்கிறார்கள்.
இனி யார் சொன்னாலும் கேட்பார்கள். ஏனெனில், என்ன செய்வது என்றே தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.ஏராளமான நாடுகளுக்கு மருந்து மாத்திரைகள், தடுப்பூசிகளை வழங்கி இந்தியா உலகத்திற்கே பார்மசியாகத் திகழ்கிறது என்று பிரதமர் மோடி மார்ச் ஏழாம் தேதி மார்தட்டினார்.இன்று வட இந்தியாவில் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவற்றிற்கு மட்டுமல்ல, மாண்டவர்களின் சடலங்களைக் கூட திறந்தவெளியில் கும்பல் கும்பலாய்ப் போட்டு எரிக்க வேண்டிய அவலம்.உண்மையிலேயே மோடி இதுவரை இந்தியா காணாத ஓர் ‘அற்புதமான’ தலைவர்தான்.
|