பாலிவுட்டில் பறக்கிறார் ராஷ்மிகா மந்தனா!



அடுத்து அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘புஷ்பா’ வில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் கொடி நாட்டுகிறார். அங்கே அமிதாப்பின் ‘குட் பை’, சித்தார் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’ என பரபரக்கிறார்.லாக்டவுனுக்கு முன்னாலேயே கமிட் ஆன படம்தான் ‘புஷ்பா’. அப்புறம், இந்தி புராஜெக்ட்ஸும் வந்துச்சு. லாக்டவுன்னால ஷூட்டிங்... ஃபங்ஷன்ஸ்னு இல்லையே தவிர நான் எதாவது ஒரு ஒர்க் பண்ணிட்டுத்தான் இருந்தேன்.
புது லாங்குவேஜஸ் கத்துக்கிட்டேன். ஆக்ட்டிங்கும் கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன். கோரியோகிராஃபி பிராக்டீஸ் பண்ணினேன். நிறைய கதைகள் கேட்டேன். ஸ்கிரிப்ட்ஸ் நிறைய வாசிச்சேன். ஸோ, கொண்டாட்டமாகத்தான் போச்சு. பிசியாதான் இருந்தேன்.

அப்புறம், என் ரசிகர்களோட பேசுற வாய்ப்பும் அமைஞ்சது. நான் நானாக இருப்பதால், என்னோட ரியல் முகத்தோடு எப்போதும் புன்னகைப்பதால் இன்ஸ்டா, டுவிட்டர்னு எல்லா இடங்கள்லயும் ரசிகர்கள் என் மீது அன்பு மழை பொழிஞ்சதை மறக்க முடியாது...’’ ரசனையாக சிரிக்கிறார் ராஷ்மிகா.

சென்னை செட் ஆச்சா?

100 பர்சன்ட்! நான் கூர்க்லதான் வளர்ந்தேன். கூர்க் மாதிரியேதான் சென்னை க்ளைமேட்டும் இருக்கு. இங்கே ரொம்ப கம்ஃபர்டபிளா இருந்தேன். தமிழ்நாடு பிடிச்சிருக்கு. எங்க வீட்ல எங்க அப்பா தமிழ்ப் படங்கள் அதிகம் பார்ப்பார். அவரோடு சேர்ந்து நானும் படங்கள் பார்த்து ரசிப்பேன். இங்கே சாப்பாடும் பிடிச்சிருக்கு.

‘சுல்தான்’ அனுபவம் எப்படி?

மறக்க முடியாதது. கார்த்தி சார் ‘கைதி’க்கு முன்னாடியே ‘சுல்தான்’ல கமிட் ஆனேன். வில்லேஜ் கேர்ள் ஆக நடிச்சது நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். நான் நகரத்திலேயே வளர்ந்தவள். ஸோ, அக்ரிகல்ச்சர், வில்லேஜ் எல்லாம் ட்ராவல் அப்ப பாக்கறதோட சரி. ஆனா, படத்துல நானே சேத்துல இறங்கி ஏர் ஓட்டியிருக்கேன். டிராக்டர் டிரைவ் பண்ணினேன். கோழியைப் பிடிக்க ஓடுவேன். இப்படி பக்கா கிராமத்து பொண்ணானேன்.

இந்தப் பட ஷூட்ல ஒருநாள் என் உடல் ரொம்ப சோர்வாகிடுச்சு. நான் அதை வெளிக்காட்டிக்காம இருக்க முயற்சித்தேன். ஆனா, கார்த்தி சாரும், டைரக்டரும் அதை கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டாங்க. அப்புறம் என்னை ஆஸ்பிட்டல் அழைச்சிட்டு போக வச்சு, பிளட் டெஸ்ட் பண்ண வச்சாங்க. ரிசல்ட்ல டெங்கு ஃபீவர். அங்கேயே அட்மிட் ஆகி, குணமானேன்.

எல்லா மேடைகளிலும் ஸ்மைலியா... எனர்ஜியா கலக்குறீங்களே..?

தேங்க்ஸ். மத்தவங்க ஹேப்பியா இருந்தா, நானும் ஹேப்பியாகிடுவேன். படம் கமிட் பண்ணும் போதே, ஒரு விஷயம் என் மைண்ட்ல ஓடும். நடிக்கற படத்துல சமூக அக்கறையோடு பொறுப்பான கேரக்டர் இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். அப்படிப்பட்ட கன்டன்ட் உள்ள படங்கள்தான் என் சாய்ஸ்.

எப்படி போகுது பாலிவுட் ஒர்க்..?

பாலிவுட் புராஜெக்ட்ஸ்னாலே எப்பவும் ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தென்னிந்திய இண்டஸ்ட்ரில எப்பவும் சொல்ற வார்த்தை, ‘பாலிவுட்னாலே அங்கே நிறைய நேரம் எடுப்பாங்க’னு. இந்தக் கருத்துல எனக்கு உடன்பாடில்ல. ஏன்னா, அங்க ஒர்க் பண்ணும்போது அவங்க ஒர்க்கிங் ஸடைல் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். அவ்ளோ திட்டமிடல், ஒருங்கிணைப்பு. அப்படி இங்கேயும் இருக்கு. என்னை பிரமிக்க வைக்கறது எல்லா இண்டஸ்ட்ரியிலுமே டீம் ஸ்பிரிட் இருப்பதுதான்.

அடுத்து சூர்யா ஜோடியா எப்ப?

நடக்கும்போது நடக்கும். சூர்யா சாரோடவும் நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஒரேநேரத்துல கார்த்தி சார், சூர்யா சார் படங்கள் கேட்டால் கூட ஒரே டைம்ல ரெண்டு படங்கள்ல யும் நடிப்பேன். நம்பிக்கை இருக்கு!

மை.பாரதிராஜா