அமெரிக்க கணவன் மனைவி!



அமெரிக்காவில் கணவன் சம்பளம் தனி, மனைவி சம்பளம் தனி. வீட்டு செலவுகளை பாதியாக பிரித்துக் கொள்வார்கள்.  இந்த உண்மையை மனதில் வைத்து ‘த மிரர்’ பத்திரிகையில் வந்த இந்தச் செய்தியைப் படியுங்கள்!

கணவன் போலீஸ் ஆபீசர். மனைவி செக்ரட்டரி. மனைவிக்கு சம்பளம் குறைவு. கல்யாணம் ஆகி சில நாட்களே ஆகிறது. இருவரும் ஒருநாள் உணவகத்துக்கு சாப்பிடச் சென்றார்கள். கணவன் நிறைய உணவுகளை ஆர்டர் செய்தான்.  பில் வந்ததும் மனைவி, ‘‘நான் சாப்பிட்டதுக்கு மட்டும் பில் கொடு...’’ என வாங்கிக்கொண்டாள்.கணவனுக்கு அதிர்ச்சி. ‘‘அப்ப நான் சாப்பிட்டதுக்கு பணம் கொடுக்க மாட்டியா?’’ ‘‘நான் ஏன் கொடுக்கணும்? நீயே கொடு!’’‘‘நான் பர்சை எடுத்துட்டு வரலை...’’

‘‘அது உன் பிரச்னை...’’ சொல்லிவிட்டு, தான் சாப்பிட்டதற்கு மட்டும் பணம் கொடுத்துவிட்டு மனைவி சென்றுவிட்டாள்.கணவன் உணவகத்தில் மாட்டிக்கொண்டு நண்பனுக்கு போன் செய்தான். இரண்டு மணிநேரங்கள் கழித்து அவன் வந்து பில்லைக் கட்டி கணவனை மீட்டான்! இந்தச் செய்தியைப் பிரசுரித்துவிட்டு ‘இதில் யார் செய்தது சரி’ என ‘த மிரர்’ கேட்க... மக்களும் சின்சியராக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார்கள்!மாவாட்டும் வசதி அமெரிக்காவில் இல்லை!
       

Paper Boy