Data Corner



*10,000 பேரில் 6.5 - 10 பேருக்கு வரும் நோயினை அரிய வகை நோய் என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஒரு கணிப்பின்படி 7,000 அரிய வகை நோய்களும் அவற்றைக் கொண்டிருக்கும் 30 கோடிப் பேரும் உலக அளவில் இருக்கிறார்கள்.

*2020- 21ம் ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 8 அடிப்படை துறைகளின் உற்பத்தி, 8.3% குறைந்துள்ளது. அவை: நிலக்கரி உற்பத்தி 4.4%; கச்சா எண்ணெய் உற்பத்தி 3.2%; இயற்கை எரிவாயு உற்பத்தி 1%; கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் பொருட்களின் உற்பத்தி 10.9%; உரங்கள் உற்பத்தி 3.7%; இரும்பு உருக்கு உற்பத்தி 1.8%.

*90% சதுப்புநிலப் பகுதியை 2004ம் ஆண்டு சுனாமியினால் நிக்கோபார் தீவுகள் இழந்துள்ளன.

*22கோடி ரூபாய் மதிப்புள்ள... அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத்தால் சேகரிக்கப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளன.

*1.05 லட்சம் போலீசார் உள்பட 1.13 லட்சம் பேர் தமிழக காவல் துறையில்  பணிபுரிகின்றனர். மாநிலம் முழுவதும் 198 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 1,500 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும்; உடல்நலக்குறைவு - 108, மாரடைப்பு - 59, விபத்து - 70, தற்கொலை - 48, கொரோனா - 40, கொலை - 1, புற்றுநோய் - 9, வீரமரணம் - 2 என மொத்தம் 337 போலீசார் இறந்துள்ளனர்.

அன்னம் அரசு