வலைப்பேச்சு



@ Gowri Laxmi - எதுவும் சரியில்லாத போது.. எல்லாமே சரியாகிவிடும் என்ற நம்பிக்கையே வாழ்க்கை

@ Priya Vassu - உங்கள் வரையறைக்குள் அடங்காத ஒவ்வொரு அவள்களுக்குள்ளும் இருக்கும் அவளை... அத்தனை எளிதில் வரையறுக்க முடியாது.

@ Dharshini Ram - எதுக்கு எடுத்தோம்னே மறந்துட்டு எதை எதையோ பாக்குறதுக்குப் பேர்தான் மொபைலு.

@Selva Kumar- ஆபீசுக்கு லீவு சொல்லலாம்னு இருக்கேன், ஒரே அசதியா இருக்கு. ஏங்க இந்தத் துணியெல்லாம் ஊறவெச்சிடவா? இல்ல போற உசுரு ஆபீசுலேயே போகட்டும்.

@manikandan.chandrasekara - தரையில் விழும் நிழல் கூட ஒரு சுவர் வந்தால் எழுந்து நிற்கும்.. தடை எனும் சுவர் வரும்பாேது துவண்டு விழாது நிழல் போல் எழுந்தால் வெற்றி நிச்சயம்..!

@ Karthick Surya - விரைவில் சந்தைக்கு வரும் செயற்கை இதயம்-செய்தி. அந்த இதயத்திலேயாவது எங்களுக்கு இடம் கிடைக்குமா? இப்படிக்கு 90ஸ் கிட்ஸ்

@ Selva Prakash - ஞாபக மறதியிலே, டேங்க் ஃபுல் பண்ண சொல்லிட்டேன். மன்னிக்கணும் அவ்வளவு காசு இல்லை, வண்டியை நீங்களே வெச்சுக்கோங்க

@Aravind_ngl- கோயிலுக்கு வெளியே தூக்கிப் போடுவர்.. கோயிலுக்கு உள்ளே துதித்துப் போடுவர்..! பசிக்கு கொடுப்பது பிச்சையாகவும் பிழைக்க கொடுப்பது காணிக்கையாகவும் மாறிப் போகிறது..!!

@ Saravanakarthikeyan Chinnadurai - சாதிப் பெருமையற்ற ஒரு சாதியில் பிறப்பது ஒருவகையில் பெரும் கொடுப்பினை. அப்படியானோர் தம் அறிவை, திறமையை, உயர்வைத் தாமே தனியே முயன்று உழைத்துச் செதுக்கியவராகிறார்கள். அவற்றுக்கான credit-ஐ எவரும் அவர்களின்
சாதிக்கு தூக்கிக் கொடுக்கவே முடியாது.

@ Paadhasaari Vishwanathan - மனப்பிடிப்பில் உழலும் காலம் என்பது ஒரு ரப்பர்பேண்ட் - முன்னே பின்னே இருபுறம் அளவுக்கு மீறி இழுத்தால் அறுந்து தொங்கும்..அளவோடு நெகிழ்த்திப் பொருளோடு பொருத்தி விடு.மனச்செயல் தெளிவு இதுவே.

@manipmp- தொழில் நுட்பங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது. ஆனால், மிச்சப்படுத்திய நேரங்களை அவையே ஆக்கிரமித்தும் உள்ளது.

@ Adangathavan - மீரா ஷாம்பூவிலே சின்ன வெங்காயம் போடுறாங்களாம். பேசாம அதை வாங்கி சாம்பார் வைக்க வேண்டியதுதான். #விலைவாசி

@ Pa Raghavan - நன்றாக யோசித்துப் பார்த்துவிட்டேன். இந்த உலகில் இரண்டு காரியங்கள் மட்டும்தான் தவறாமல் எப்போதும் சொதப்புபவை.
1. கவிதைக்கான மொழியை ஒரிஜினலாக யோசித்துத் தேர்ந்தெடுப்பது2. குதிகால் வெடிப்பின் ஓட்டையைச் சரியாக அடையாளம் கண்டு களிம்பு போடுவது.

@karuva_official- இங்கு யாருக்கும் எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை; எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது.

@SenthilY - நாங்க விலை ஏத்துறதே அடுத்த தேர்தல்ல விலை குறையும்னு தேர்தல் வாக்குறுதி விடத்தான்...

@ Indran Rajendran -  பணத்தை நட்புடன் கையாளும் ஜப்பானியக் கலை: HAPPY MONEY : THE JAPANESE ART OF MAKING PEACE WITH YOUR MONEY =KEN HONDA: பணத்தை ஜென் மனநிலையுடன் கையாள்வது எப்படி என்று 7 மில்லியன் பிரதிகள் விற்ற நூல் கற்றுக் கொடுக்கிறது.

பெரும்பாலான நேரங்களில் பணம் என்பது பயத்தையும், பதைபதைப்பையும், கோபத்தையும், சக மனிதனின் மீது விரோதத்தையும் கொண்டு வந்து விடும்.

1. பணத்தை எந்த மனநிலையில் நீங்கள் கொடுக்கிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து பணம் என்பது அழுகிறது அல்லது சிரிக்கிறது.

2. குற்ற உணர்ச்சி , கோபம், சோகம் ஆகிய உணர்வுகளுடன் கொடுக்கப்படும் பணம் அழுகிறது.

3.அன்பு, நன்றி, மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளோடு கொடுக்கப்படும் பணம் சிரிக்கிறது.

4. லஞ்சமாக நம்மிடம் வந்து சேரும் பணம் நம்மைக் குற்றவாளிக் கூண்டில் அடைக்கிறது.

@Rajesh Kumar - வாழ்க்கையில் ஒருசிலர் மட்டும் சாதனைகளை நிகழ்த்த என்ன காரணம்? ( மா.பாண்டியராஜ், சிவகங்கை)   இருபது வருடங்களுக்குமுன் டென்னிஸ் விளையாட்டில் மார்ட்டினா நவ்ரத்திலோவா நட்சத்திர அந்தஸ்து பெற்ற  அருமையான வீராங்கனை. அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர்  ஒரு கேள்வி கேட்டார். ‘‘43 வயதில் கூட  உங்கள் கவனம், உடலமைப்பு மற்றும் விளையாட்டு... எல்லாம் அற்புதம்....இது எவ்வாறு சாத்தியம்?”

அதற்கு அவர்,  “டென்னிஸ் பந்துக்கு என் வயது எத்தனை என்று தெரியவில்லை...அதனால்தான்” என்றார்.  தொடர்ந்து...அவர் சொன்ன விஷயங்கள் முக்கியமானவை. வாழ்க்கையின் ஒவ்வொரு ஆட்டமும் உண்மையில் 6 அங்குல இடத்தில்தான் விளையாடப்படுகிறது - அது உங்கள் இரண்டு காதுகளுக்கு மத்தியில் உள்ள இடம். நாம் பெரிய வீடுகளில் அல்லது பங்களாக்கள் அல்லது ஃப்ளாட்களில் வசிப்பதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில், எல்லையே இல்லாத மனது என்ற வீட்டில்தான் நாம் வாழ்கிறோம். அங்கு விஷயங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருந்தால் வாழ்க்கை சிறக்கிறது. சாதனை நிகழ்த்தப்படுகிறது.

@ Saravanan Jayaraman - எதை இழந்து எதை பெறுகிறோம் என்ற தெளிவில்தான் இருக்கிறது மொத்த வாழ்க்கைக்குமான மகிழ்ச்சி.

@thilbharathi தில்பாரதி- பெட்ரோல்: நான் 100ஐ  தொடப்போறேன். கருவேப்பிலை: இப்பதான் 100 ஐயே தொடப்போறீயா

@Mohamed Abdullah - மரணத்தைக்கண்டு ஆண்கள் எப்போதும் பயப்படுவதில்லை. அவர்களின் பயமெல்லாம் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தின் நிலையைப்பற்றித்தான்.

@Satheeshkannan - மார்க் கிட்ட சொல்லி இந்த Facebook-க்கும் Neet தேர்வு வைக்கச் சொல்லணும். எது ஒரிஜினல் எது ஃபேக் ஐடின்னு தெரியலை.

@anand17m - நமது வரலாற்றை நம்மையே அழிக்க வைத்ததுதான் இணையத்தின் சாதனை... Clear your history.