கொரோனாவை தடுக்க ரூ.2.80 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்!தூத்துக்குடி ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் பிச்சை எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பிச்சை எடுத்த தொகையில் உணவு செலவு போக மீதமுள்ளதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 27 முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார். இதற்காக சுதந்திர தின விழா அன்று அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர் 28 வது முறையாக ரூ.10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கியிருக்கிறார்.அதாவது இதுவரை அவர் 2.80 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்!‘‘மதுரையில் இருக்கும் வரை பிச்சை எடுத்து வரும் பணத்தை தொடர்ந்து வழங்குவேன்...’’ என கெத்தாக சொல்கிறார் பூல்பாண்டியன்.

காம்ஸ் பாப்பா