24வது ஆண்டாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை புதுப்பித்த வாலிபர்!அரசு வேலை என்பது அனைவரின் கனவு. அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கான முன்னுரிமையை பெற்றுத்தருவது பதிவு மூப்பு என்னும் வேலைவாய்ப்பு பதிவுதான்.இப்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 11,35,866 பேர் 57 வயது வரையில் உள்ள பதிவுதாரர்கள். 7 ஆயிரத்து 648 பேர் 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள்!  

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆனந்தராஜ் தொடர்ந்து 24வது ஆண்டாக தனது பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இவருக்கு இதுநாள் வரை எந்த ஒரு வேலைக்கான அழைப்புக்கடிதமும், நலம் விசாரித்துக் கூட கடிதமும் வரவில்லையாம். இதனால் தனது புதுப்பித்தலை பேனராகவும், போஸ்டராகவும் அச்சடித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டியுள்ளார்!

காம்ஸ் பாப்பா