Fun With சமந்தா!இண்டஸ்ட்ரீயில் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் கெத்து காட்டுகிறார் சமந்தா. அங்கே அவரை ஒன்றரைக் கோடி ரசிகர்கள் பின்தொடர்வதால் ஒவ்வொரு பதிவிலும் ஸ்டைலீஷ் க்ளிக்குகள் துள்ளுகின்றன. தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ தவிர வெப்சீரீஸான ‘ஃபேமிலி மேன்’ சீஸன் 2விலும் மெயின் ரோலில் புன்னகைக்கிறார். சமத்து பொண்ணு சமந்தாவிடம் ஜாலி கேள்விகளை வீசினால், செம க்யூட் பதில்கள் அள்ளுகின்றன.
இந்த வருஷம் ரெசல்யூஷன் என்ன ப்ளான் பண்ணுனீங்க..?

யோகா பண்ணும்போது, மறக்காமல் மூச்சுப் பயிற்சியும் பண்ணணும். ரொட்டீனா சின்ஸியரா தினமும் அதை ஃபாலோ பண்ணணும்னு தீர்மானிச்சிருக்கேன்.  ஏன்னா, மூச்சை கண்ட்ரோல் பண்ணத் தெரிஞ்சா, லைஃபையும் கண்ட்ரோல் பண்றது ஈஸினு நினைக்கறேன். ஜிம் ஒர்க்கவுட், ஃபிட்னஸ் இதெல்லாம் எப்பவும் பண்றதுதான்.

அதைப்போல டயட் இருக்கறது பிடிக்காது. நல்லா சாப்பிடணும்னு தோணினா, விரும்பினதை சாப்பிடுவேன். எந்த ஊருக்கு ஷூட் போனாலும் அங்கே உள்ள ஸ்பெஷல் டிஷ்ஷை ஒரு புடி புடிப்பேன். நிறைய புக்ஸ் படிக்கறீங்க.. உங்க ஃபேவரிட் புக்ஸ் எதெல்லாம்..?

பெரிய லிஸ்ட்டே இருக்கு.

புக்ஸ் ரொம்ப பிடிக்கும். என்னோட சின்ன வயசுல என்னை படிக்கத் தூண்டின புத்தகங்கள் பத்தி நிறைய சொல்லலாம். காமிக்ஸ் விரும்பிப் படிப்பேன். ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஆப்லிக்ஸ், சாந்தாராம், மகாபாரதா... இந்த புத்தகங்கள்னாலதான் என்னோட வாசிப்பு உலகம் விரிஞ்சது.

கடந்த காலத்துல மறக்கமுடியாத விஷயம் எது?

கடந்த காலத்தை ஏன் நினைக்கணும்? அதை எப்பவும் நினைக்கவும் மாட்டேன். ரிமைண்டர்ல போட்டுக்கவும் மாட்டேன். வாழ்க்கையை அழகாக்கணும்னா, நிகழ் தருணத்தை கொண்டாடணும். இப்ப இந்த நிமிஷத்தை ஹேப்பியாக்கணும்னுதான் விரும்புவேன். நிகழ்காலத்தை சந்தோஷமா வச்சுக்கிட்டாலே எதிர்காலம் இனிப்பாகும்.

ரொம்ப சீரியஸானால், எப்படி டைவர்ட் பண்ணுவீங்க?

சில நேரங்கள்ல மூட் சீரியஸாகிடும். அது நேச்சர்தான். ஆனா, ஒரு விஷயத்துல நான் லக்கி. நான் pet lover. அதனால கொஞ்சம் சீரியஸா இருந்தாக் கூட என் மொபைலை ஆன் பண்ணி யூடியூப் போயிடுவேன். அதுல funny dogs வீடியோக்களின் கலெக்‌ஷன்ஸை பார்த்து ரசிக்க ஆரம்பிச்சிடுவேன். அதோட குறும்புத்தனங்களை பார்த்ததும் மூட் ஃப்ரெஷ் ஆகிடும்.

உங்களுக்கு ரெண்டு வாய்ப்புகள் கிடைக்குது. ஒண்ணு, உங்களோட செல்ல நாய்க்குட்டியோட செம ஜாலியா அவுட்டிங் கிளம்பலாம். இல்லனா அதே நாள்ல உங்க கணவரோட ரொமாண்டிக்காகவும் சுத்தலாம். ரெண்டுல எதை செலக்ட் பண்ணுவீங்க?

இப்படியெல்லாம் கேட்குறீங்களே..! என் கணவரோடு ரொமாண்டிக்கா சுத்தலாம்னுதான் ஆசைப்படுவேன். ஏன்னா, அவருக்குதான் டெய்லி ஷூட் இருக்கு. ஒர்க்ல பிசியா இருக்கார். அவர் ஃப்ரீயா இருக்கிறப்ப என் ஒர்க் ஸ்டார்ட் ஆகுது. ஸோ, டைம் கிடைச்சா அவரோட சுத்தத்தான் விரும்புவேன். இன்னொரு விஷயம், செல்ல நாய்க்குட்டி எப்பவும் என் கூடத்தானே இருக்கு!

ஒருநாள் காலையில நீங்க எழுந்திரிக்கும்போது, நீங்க முதல்வர் ஆகிட்டீங்கனு சொன்னா.. முதல்ல செய்ய விரும்பும் விஷயம் என்ன?ஒண்ணும் பண்ணமாட்டேன். மறுபடியும் தூங்கி, சமந்தாவா எழுந்திரிப்பேன்! ஏன்னா, எப்பவும் எனக்கு சமந்தாவாக இருக்கறதுதான் பிடிக்கும்.
சென்னைக்கு எப்ப வந்தீங்க?இடையே ஒரு வாரம் வந்திருந்தேன். வீட்டுலதான் இருந்தேன். அதுவே சந்தோஷமா இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸையும் மீட் பண்ணினேன்.

மை.பாரதிராஜா