வலைப்பேச்சு



@amuduarattai - சேலைகளுக்கு நடுவே வைத்த பணம் கூட கணவரால் காணாமல் போகும். ஆனால், கல்யாண ஆல்பத்திற்குள் வைத்த பணம், கண்டிப்பாக கணவரால் காணாமல் போகாது.

@GreeseDabba2 - தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயம் விலை உயர்வு - செய்தி.பெட்ரோல், டீசல்: ஆனா, விதை... நாங்க போட்டது!

@mohanramko - விவசாய நிலமே இல்லைனு சொல்ற, அப்புறம் எப்படி அது செழிப்பான ஊர்?அது இல்லைனா என்ன? ஊருக்குள்ள 4 பெட்ரோல் பங்க் இருக்குன்னா பார்த்துக்கோயேன்..!

@HariprabuGuru - போற போக்கைப் பார்த்தா பெட்ரோல் பங்க் பக்கம் யாராவது போனாலே இன்கம்டேக்ஸ் ரெய்டு வருவாங்க போலிருக்கு...

@saysatheesh - உலகம் பூரா எங்கே போனாலும்... ஐநா கூட்டமே ஆனாலும் இந்தியிலேயே பேசிட்டு இருந்தவர் தமிழ்நாடு வந்தால் மட்டும் கஷ்டப்பட்டாவது இங்கிலீஷில் பேசுவதை கவனிச்சீங்களா??அது #தமிழ்நாடு.

@shivaas_twitz - இந்த சமையல் குறிப்பு யூ டியூப் சேனல்ஸை எல்லாம் தடை பண்ணலாம்... சமையல் கேஸ் அதிகம் செலவாக அவங்களும் ஒரு காரணம்; அது போக கணவன்மார்களும் கொஞ்சம் நிம்மதி அடைவாங்க!

@SriviShiva - ரசிகர்கள் எல்லை மீறிப் போயி இம்சை பண்றதையெல்லாம் பேரன்புன்னு ரொமாண்டிசைஸ் பண்ணாதீங்கய்யா. நம்ம அப்பனுக, தாத்தனுகதான் சினிமா வெறி பிடிச்சு தமிழ்நாட்டின் அரசியல் திசையைப் பிறழ விட்டானுக. அடுத்த தலைமுறையாவது சினிமா போதை குறைஞ்சு தெளிவாகட்டும்.

@Annaiinpillai - செஞ்சுரி அடிக்கப் போவதுக்கு ஊரே வருத்தப்படுகிறது என்றால் அது பெட்ரோல் விலை என்று அறிக..!

@sankariofficial - கண்காணிக்கப்படாத ஒரு தவறு அடுத்தடுத்த தவறுகளுக்குப் பாலம் கட்ட செங்கல் எடுத்து வைக்கிறது...

@chithradevi_91 - பிரதமர் நேத்து தமிழ்ல ‘உயரும் உயரும்’னு பேசினப்பவே புரிஞ்சிருக்கணும்யா... பெட்ரோல் விலை உயரும், கேஸ் விலை உயரும்னு...

@Saravanakarthikeyan Chinnadurai - ஆணுக்கு எவரையும் கட்டிக் கொண்டு தூங்கப் பிடிக்காது. குளிர்காலமென்றாலும் அது ஒரு கசகசப்பு. போர்வைக்கு இணை எந்தப் பெண் பிள்ளையும் இல்லை என்ற ஞானம் அவனுக்கு வெகுசீக்கிரத்தில் வந்து விடுகிறது. ஆக, அவன் பிரக்ஞைபூர்வமாய் அணைப்பு என்பதைக் கவிதை வரிகளோடு நிறுத்திக்கொள்வான்.ஆண் இயல்பிலேயே சார்பற்றவன், சுதந்திரம் விரும்புபவன். விடுதலை என்ற கருத்தாக்கம் படுக்கையிலிருந்து துவங்குகிறது அவனுக்கு.

@mohanramko - Fast tag இருந்தா டோல்கேட்டை வேகமா கடந்து போயிடலாம்மா...அந்த டோல்கேட்டே இல்லைனா இன்னும் வேகமா போயிடலாம் மாமா..!

@prabhu65290 - டேய்... பெட்ரோல், சமையல் கேஸ் விலை ரொம்ப ஏறிப் போச்சுடா...பிஜேபி சப்போட்டர்ஸ்: அதனால்தாங்க ஓவியா மேல கேஸ் போட்டிருக்கோம், இனி ஒண்ணும் பிரச்னை இல்லை...

@ramesh_twetz - பஸ்ல உட்கார்ந்துட்டு யாராவது கண்டக்டரை கவனிச்சிட்டே இருந்தாங்கனா அவங்களுக்கு சில்லரை பாக்கி வர வேண்டி இருக்குனு அர்த்தம்..!

@Gokul Prasad - அசலான பெண்ணியவாதியால் சக பெண்களுடன் இயல்பான நட்பைப் பேண இயலாது. ஆண்களுடன் இணைந்து மட்டுமே அவரால் நட்புணர்வுடனும் புரிந்துணர்வுடனும் செயல்பட முடியும்.

@Kt__nisha294 - சிரிப்பை விட அழுகை மதிக்கத் தெரிஞ்ச இடத்தில் மட்டுமே வரும்..

@Shruthi R - Having an insecurity is so common. எல்லாருக்கும் இருக்கும். உயரம் - நிறம் - எடை - உடலமைப்பு - முகம் - குரல்னு அது நீண்டுட்டே போகும். ஆனா, அந்த insecurityய தாண்டி பொழச்சு வளர - அத கடக்கத் தெரியணும். அந்த நிலைய நாம அடைய, நம்ம சுத்தி யாரு இருக்கா - அவங்க என்ன மாதிரி மனநிலையில நம்மள அணுகுறாங்க என்பது பெரிய parameter.

நாமளே நம்ம குறைய பெரிதுபடுத்தாமல் அதைவிட்டு வெளியே வரணும்னு முற்படும்போது சுத்தி இருக்குற நாலு பேர் அந்த குறையை சொல்லிச் சொல்லி நம்மளை கேலி பண்ணும்போது அதை மறந்து - அதை விடுத்து வெளியே வர்ற அளவுக்கு பக்குவம் நமக்கு வருவதில்லை.
Infact அந்த மாதிரி கேள்விகளை எப்படி கையாளணும்னு தெளிவு கூட வராத வயசுலயே நம்மள்ள நிறைய பேருக்கு இந்த மாதிரி body shaming instances நடக்க ஆரம்பிச்சிருக்கும். இப்படியான bullyingஐ எப்படி அணுகணும்னு கூட யாரும் நமக்கு சொல்லித் தருவதும் கிடையாது. ஏன்... அப்படி ஒண்ணு நடக்கும்போது சுத்தி இருக்கிறவங்க நமக்கு சப்போர்ட்டுக்கு வருவதும் கூட கிடையாது.

எங்கோ ஓர் இடத்தில் தனித்து விடப்பட்டு - ஒருத்தர் ரெண்டு பேர் கலாய்க்க மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி அந்த mental agonyய வாங்கிட்டு நின்ன haunting memory நம்ம எல்லாருக்குமே உண்டு. இன்னும் உள்ள போனா நம்மாளுங்க கொஞ்சலுக்குக் கூட இந்த மாதிரி உடல் குறைகளை சொல்லித்தான் கொஞ்சுவாங்க.

Having been bullied right from childhood, ஒரு கட்டத்துல இரண்டு வகையான தற்காப்பு கவசத்தை உபயோகிக்க ஆரம்பிச்சேன்.
ஒண்ணு கலாய்க்கறாங்களா? அங்கயே அவங்க மூக்கை உடைச்சு விடவேண்டும். There is nothing so satisfying than snapping a bully. இல்லையா, ஒருத்தங்க நம்ப உடலை வச்சு நம்மகிட்ட கேலிப்பேச்சு பேசுறாங்கன்னு தெரிஞ்சுட்டா இன்னொரு தடவ அவன்கிட்ட மூஞ்சியே கொடுக்காம இருந்துடணும்.

அலுவலகம் - ரொம்பத் தெரிஞ்ச பெரிய மனுஷங்க - ரொம்ப நெருக்கமான உறவு - avoid பண்ணமுடியாத மனிதர்களை எல்லாம் இந்தமாதிரி பேசாம தவிர்த்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து வந்துவிடணும். It somehow worked on a great extend. Bullyingன்னு வந்துட்டாலே அதிகம் வந்து ஆணி புடுங்க ஆஜராவதெல்லாம் ஆன்ட்டிகள்தான்.

முகப்பரு தழும்புகளுக்காகவே ரொம்ப நாள் போட்டோக்களே எடுக்காத காலமெல்லாம் இருந்தது. அதன்பிறகும் youcam app - candy filterஅ  கட்டிக்கிட்டு அழுத காலமும் இருக்கு. இதையெல்லாம் தாண்டி முகப்பருத் தழும்புகளோடு என்ன நான் ஏத்துக்கவே எனக்கு 24 வயதாச்சு.
அவ்வளவுதானே? இனி சுபம்தானேனு வாழ்க்கை என்னிக்கு போயிருக்கு?

அடுத்து வந்த வினை - weight. Post - meningitisல நடந்த நிறைய நாசமா போன நிகழ்வுகளில் weight gainம் ஒண்ணு. கிட்டத்தட்ட 12 கிலோ என்னோட எடைய விட அதிகமாகிட்டேன். Depression craving - bed ridden 6 months - coronaனு நம்ம வாழ்க்கையில அது தனியா பேஸ்கட்பால் ஆடி முடிச்சவுடனேயே கல்யாணம்!

தொக்கா சிக்கினோமா? செவனேன்னு இருந்தாலே வம்படிக்கு வந்து கருத்து சொல்லிட்டு போவானுங்க... போற வர இடமெல்லாம் எவனாவது வந்து எப்படி dress பண்ணணும் - என்ன colorல dress பண்ணணும் - என்ன சாப்பிட்டா weight குறையும் - வீட்டுல வேல வெட்டிலாம் செய்வியானு தேங்காய் பத்தைய பார்த்த எறும்பு மாதிரி மொய்க்க தொடங்கிட்டானுங்க.

Frankly saying இந்த நாய்ங்க பண்ண வேலைல I had zero confidence to walk into the Dias. நிச்சயமே வேண்டாம், கல்யாணமே வேண்டாம்னு நிறைய அழுது - பொரண்டு அப்பறம் ஒப்புக்கிட்டு ஏதோ ஒரு பயத்தோடதான் நிச்சயதார்த்தத்தை அணுகினேன்.

என் body sizeக்கு டிரெஸ் கிடைக்குமானு போய் கடைத் தெருவுல கேட்கக் கூட வெட்கமா இருந்துச்சு. நானே design பண்ணேன். நானே அளவெடுத்தேன். நானே துணிகளை வாங்கினேன். தைக்க மட்டும் ரொம்ப அமைதியான தெரிந்தவர் ஒருத்தர் கிட்ட கொடுத்தேன். He did a marvellous job.

இருந்தும் ரூமை விட்டு வெளியே வர ரொம்ப நேரம் யோசிச்சேன். இது நல்லா இல்லை... ரொம்ப குண்டா இருக்கும். கேவலமாக இருக்கும் - என்கிற பயம் தெறிக்க வெளிய வந்தபோது ஒருசேர ‘சிண்ட்ரெல்லா மாதிரி இருக்க’ன்னாங்க. மூணு நாள் கழிச்சி சிரிப்பே அப்போதான்
வந்துச்சு. God! பாராட்ட ஆள் இல்லனா இந்த மனுஷன்தான் என்ன ஆவான்?!

Introvertஆகவே இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் social acknowledgement ரொம்ப முக்கியம். தன்ன தூக்கி வச்சு கொண்டாடலன்னாலும் சக மனிதனாகவாவது இந்த உலகம் மதிக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா மனிதனுக்கும் உண்டு.

அந்த அடிப்படை எதிர்பார்ப்பைக் கூட பூர்த்தி செய்யாமல் ஒருத்தர நாம் அணுகறோம்னா - நமக்கு மனிதனாக வாழ எந்த தகுதியும் இல்லைன்னு அர்த்தம்!   

@prabhu65290 - நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் - செய்தி.இந்தா புள்ள... தண்ணி எடுக்க மெயின் ரோட்டுக்கு போயிடாத... ஏமாந்தா நடந்து போகக் கூட வரி போடுவாங்க...

@Vikki_Twits - பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.90-ஐ கடந்தது - செய்தி.‘இதுவரை இல்லாத அளவிற்கு’ என்கிற வார்த்தையையாவது மிச்சம் வைங்கய்யா.. இன்னும் 4 வருஷம் இருக்கு ஆட்சி முடிய..?!

@Itzdahliaa - போலியான புகழ் என்பது வேரில்லாத மரம் போன்றது. உண்மைக் காற்று ஓங்கும்போது குடை சாய்ந்து விடும்.

@aroobii_ - ரோஜாக்களை எதிர்பார்த்து வெகு சிரத்தையுடன் உரமிட்டு முட்களை வளர்க்கும் விசித்திரம்தானே உங்கள் வரையில் வெற்றிகரமான வாழ்க்கை?