பாரிஸ் ஜெயராஜ்சிங்கிளாக இருந்து மிங்கிளாக நினைக்கும் கானா பாடகர் வாழ்க்கையில் காதல் படும்பாடுதான் ‘பாரிஸ் ஜெயராஜ்’.வடசென்னை ஹவுஸிங் போர்டுவாசியான ஜெயராஜ், கானா ஆர்க்கெஸ்ட்ரா நடத்தி வருகிறார். ஜெயராஜின் அப்பா பிரகாஷ்ராஜ், வழக்கறிஞர். ஜோடியாக இருப்பவர்களைப் பிரித்து வைப்பதுதான் அவரது ஃபுல்டைம் ஜாப். இருவேறு குணாதிசயமுள்ள இருவர். இடையில் பூக்கிறது காதல். பிரிக்கப் பார்க்கும் அப்பா. சேரத் துடிக்கும் மகன்.

மகனின் காதலை அப்பா ஏன் பிரிக்க முயற்சிக்கிறார்... இதை மீறி தன் காதலியை மகன் மணமுடித்தாரா என்பதுதான் ‘பா ஜெ’.ஜெயராஜ் ஆக, சந்தானம். வடசென்னை கேரக்டர் என்றால் அவருக்கு அல்வா. ஸோ, இனிக்க இனிக்க இன்வால்வ் ஆகிறார். சென்னை ஸ்லாங்கிலும் உடல் மொழியிலும் ‘வூடு கட்டி’ அடித்திருக்கிறார். பகலில் நண்பர்கள் கல்கி, ஜிம்கிலியுடன் குடித்து அலம்பல் செய்வதாகட்டும், தன் காதலி யாரென தெரிய வரும்போது அவர் காட்டும் ரியாக்‌ஷனாகட்டும்... ரசிக்க வைக்கிறார்.

வக்கீல் பிரகாஷ்ராஜாக டோலிவுட் நடிகர் பிருத்விராஜ். தெலுங்கில் காமெடி ப்ளஸ் குணச்சித்திரத்தில் எக்கச்சக்க மார்க் அள்ளியவர். போதாதா... தமிழில் டிஸ்டிங்ஷன்.  காலேஜ் கேர்ள் திவ்யாவாக அனைகா சோட்டி. செக்ஸி மிக்ஸி. கியர் போட்டு கிறங்கடிக்கிறார். பிருத்விராஜின் மனைவிகளாக வரும் ரமணி, நளினா இருவருமே அம்மாக்களாக இனி ஒரு ரவுண்ட் வருவார்கள்.

மொட்டை ராஜேந்திரன் - அவரது அசிஸ்டன்ட் மாறன் கூட்டணியின் காமெடி, சில இடங்களில் அதிரடி ஆட்டம் பாம். தன் மகன் காயம்பட்டு இருப்பதைப் பார்த்த ராஜேந்திரன், ‘கோதுமை ரொட்டி மாதிரி இருந்த உன்னை இப்படி அர்ஜுன்ரெட்டி மாதிரி ஆக்கிட்டாங்களேப்பா’ என ரைமிங்காக சொல்ல, அதைக் கேட்ட அவரது அசிஸ்டன்ட், ‘அர்ஜுன் ரெட்டியை மூணு டைரக்டர் பண்ணினாங்க. எந்த அர்ஜுன் ரெட்டியை சொல்றீங்க’ என டைமிங் அடித்ததில், தியேட்டரே அதிர்கிறது. சஷ்டிகா ராஜேந்திரன், சேசு, கல்கி, ஜிம்கிலி, ஜார்ஜ் தங்கதுரை என பலரும் அசத்தியிருக்கிறார்கள்.

எல்லாம் ஓகேவாக இருந்தாலும், சந்தானத்தின் ஒட்டுத்தாடி... ம்ஹும். மேக்கப்பை ஒரு லேயர் கம்மி பண்ணலாம் பாஸ்.‘ஏ1’க்குப் பிறகு மீண்டும் சந்தானத்துடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் ஜான்சன். லாஜிக் பார்க்காமல் மேஜிக்கை ரசிக்கலாம். ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு, பளீச். சந்தோஷ்நாராயணன் இசையில் கானா பாடல்கள் அனைத்தும் தேனாறு. கவுண்டமணியின் புகழ்பெற்ற காமெடியை முழுநீளப் படமாக்கி இருக்கி
றார்கள்.

குங்குமம் விமர்சனக் குழு