HOT கிசுகிசுமம்மி வாய்ஸில் நடிகை!

கதைக்கேத்த மாதிரி க்ளாமர் காட்டும் ஹீரோயின், இப்போது தொடர்ந்து ஃபேமிலி டிராமாவில் கிடுகிடுக்கிறார். அவரது மொபைல் எண்ணிற்கு யார் தொடர்பு கொண்டாலும் ‘மச்சான்’ பாட்டு ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து ‘வணக்கங்க... நான் அவங்க அம்மா பேசுறேன். என்ன விஷயம்னு சொல்லுங்க. பொண்ண பேச சொல்றேன்’ என பணிவான குரல் ஒலிக்கிறது. தொடர்பு கொண்டவர்கள் ‘பேசுவது நடிகையின் தாய்க்குலம்தான்’ என உறுதியாக நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் ‘மம்மி’ வாய்ஸில் மிமிக்ரி செய்வது நடிகையேதானாம். உஷாரான பொண்ணுதான்.

காமெடி கேட்கும் ஜிம் பாய்ஸ்

காமெடியிலிருந்து ஹீரோவாகிவிட்டரின் அலம்பல் பற்றித்தான் கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது. தன்னை டாப் ஸ்டார் ரேஞ்சுக்கு நினைத்து படப்பிடிப்பில் தனக்கென ஜிம் பாய்ஸ் டீம் வேண்டும் என ஒப்பந்தத்திலேயே சொல்லி விடுகிறாராம். அதற்கு சம்மதிக்கும் கம்பெனிகளில் மட்டுமே படங்கள் பண்ணுகிறாராம். இதில் காமெடி என்னவெனில் பொதுமக்கள் நுழைய முடியாத ஏரியாவில் உள்ள ஷூட்டிங் ஹவுஸில் படப்பிடிப்பு நடத்தினாலும் ஜிம் பாய்ஸ் புடைசூழத்தான் ஹீரோ வலம் வருகிறார் என்பதுதான். ‘நீ வாங்குற அஞ்சு பத்துக்கு இதெல்லாம் தேவையா’ என கமெண்ட் அடிக்கிறார்கள் கோலிவுட்டில்.

கசப்பை மறக்காத நடிகை!

டோலிவுட்டில் அறிமுகமாகி அங்கே பளபளக்கும் ஹீரோயின் அவர். இதற்கு முன் இங்கே புதுவீடு கட்டியிருக்கும் ஹீரோவின் படத்தில் நடித்திருந்தார். படமும் ஹிட். ஆனாலும் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் பழைய இண்டஸ்ட்ரீக்கே பறந்துவிட்டார். விஷயம் அதுவல்ல.

முந்தைய படத்தில் நடித்த ஹீரோவுடன், மீண்டும் கூட்டணி போட இங்கே கூப்பிட்டிருக்கிறார்கள். அதை சற்றும் எதிர்பார்க்காத நடிகை, ‘உங்ககிட்ட ஏற்கெனவே பட்டபாடு போதும்பா... இன்னும் அந்த கசப்பு அப்படியே இருக்கு...’ எனச் சொல்லி போனை துண்டித்து விட்டாராம்.

காவின் பேக்கேஜ்!

தீவுக்கு சென்று பெனிஃபிட் அடைந்தவர்கள் ஏராளம் என்றாலும் சமீபத்தில் அந்தத் தீவுக்கு சென்று, க்ளாமரில் குளுகுளுத்தவர் அந்த வொயிட் ஜிலேபி.அங்கே பேக்கேஜ் டூர் புரொமோஷனுக்கு கிடைத்த பேமெண்ட்டை பார்த்தவருக்கு ஸ்வீட் ஷாக்.

‘படங்களில் கமிட் ஆகி, மாசக்கணக்குல ஒரே படத்திற்காக ஓடியாடி உழைப்பதை விட ஐலேண்ட் பேக்கேஜ் ஆஃபர் பெஸ்ட்டா இருக்கே’ என ஃபீலாக ஆரம்பித்துவிட்டார். விளைவு? அதைப் போல வியாபாரம் ஆகாத சொகுசு ஸ்பாட்டுகள் எந்தெந்த நாடுகளில் இருக்கிறது... அதை புரொமோஷனாக்க ஐடியாவை அள்ளி வீசி எப்படி பில் நீட்டலாம்... என யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். பிழைக்கத் தெரிந்தவர்தான் அந்த ‘கா’.

ஷியஸ்