வலைப்பேச்சு



@pachaiperumal23 - தமிழ்நாட்டின் வரவேற்பைக்கண்டு, சுதந்திரப் போராட்டத்தில் பல இன்னுயிர்களைக் காவுகொண்ட அந்தமான் சிறைச்சாலை அழுது குலுங்கியது.

@drkvm - Joe Biden க்கு அழைப்பு -மோடிஜி.தொரைக்கு... புதுசா ஒரு தடுப்புச் சுவர் பார்சல்...

@manipmp - ரிலேட்டிவிட்டி தியரி என்பது பந்தியில் சாப்பிடுவதற்கும் பந்தியில் சாப்பிட காத்திருப்பதற்கும் இடையிலானது.

@mohanramko - மன்னா, இவ்வளவு போலீஸ் பாதுகாப்பையும் மீறியா ராஜமாதா நம் கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடப் போகிறார்?
மங்குனி அமைச்சரே, பாதுகாப்பு போட்டிருப்பது, இங்கிருந்து யாரும் செல்லாமல் இருக்க...

@Karl Max Ganapathy - நாம் எப்போதும் ஊழலுக்கு எதிரானவர்கள் இல்லை. ஏனெனில் அது நம் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்டிருப்பதை நாம் அறிந்தே இருக்கிறோம். நாம் விரும்புவதெல்லாம் திருடர்களிடம் வெளிப்படவேண்டிய ஒரு சின்ன தலைக்குனிவை... சற்றே பாவனையான அடக்கத்தை அவர்கள்  காட்டவேண்டும் என்றுதான்.

அதை அவர்கள் செய்யாதபோது அவர்களிடம் கோபித்துக்கொண்டு, இருப்பதில் தன்மையான இன்னொருவரிடம் ‘நீங்களாவது பார்த்து பதமா பண்ணுங்க’ என்று குனிகிறோம். இதுவே மக்களாட்சியின் எளிய சூத்திரம்!

@kumarfaculty - டூவீலரில் குழந்தையை முன்னால் உட்கார வைத்து ஓட்டும்போது நம் தொப்பை அவர்களை இடித்துவிடாத வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்...

@radhavenkat2 - தன் உயிர் போனாலும் தன் பிள்ளை பிழைக்கட்டும் எனக் காப்பாற்றும் தாய்.தன் நண்பன் நலத்துக்காக, தான் கடனாளியாக மாறும் நண்பன்.அவள் கேட்கும் பொருளை தன்னால் இயலாதபோதும் வாங்கித் தரும் காதலன்.இப்படியாய் இன்னும் இன்னும் பல. அன்புக்கு ஏமாளி என்றொரு பெயரா? இல்லை. அது அன்பு மட்டுமே.

@Meenamma Kayal - ‘எடிட்டிங் by’ன்னு போட்டு வாட்டர் மார்க்லாம் வைக்கிறாங்க... அதுவும் எதுக்கு... புதுப்பாட்டு வீடியோவுல பழைய இளையராஜா பாட்டோட ஆடியோவ சேர்த்ததுக்கு... அட பைத்தியக்கார பசங்களா...

@Sowmya Red - பெண்கள் தங்களுடைய தேவைகளுக்கு தங்கள் குடும்ப ஆண்களை சார்ந்திருக்கும் வரை குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடையாது.

@Bogan Sankar - தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவில், காதலர்களை பெரும்பாலும் ‘மாமா’ என்றுதான் காதலிகள் அழைக்கிறார்கள். ‘மாமா’ என்று காதலனை விளிக்கும் நிறைய பாடல்கள் உள்ளன. பதிலுக்கு ‘அத்தை மவளே’ என்று ஆண்கள் பாடுவார்கள். தாய்மாமனைக் கட்டிக்கொள்ளும் பழைய தமிழ்ப் பழக்கத்தின் தொடர்ச்சி.

ஆங்கிலத்தில் ‘பேபி’ என்று தொடங்கினாலே காதல் பாட்டு என்றுதான் அர்த்தம். ‘டாடி’ என்று பதிலுக்கு பெண்கள் அழைப்பதுண்டு.
ஆனால், கேரளத்தில் பெரும்பாலும் பெண்கள் புருஷனை, காதலனை ‘சேட்டா!’ என்றுதான் அழைக்கிறார்கள். அண்ணன் என்பதற்கும் சேட்டாதான்!
ஆனால், சேட்டா என்று தொடங்கும் ஒரு பாடல் கூட என் நினைவுக்கு வரவில்லை.ஆண்கள்தான் ‘ஓமனே! ஓமனே!’ என்று உருகியிருக்கிறார்கள்.

@Pa Raghavan - எல்லா சீரியல் நாயகிகளும் புதிய குண்டு தாலியுடனேயே இருக்கிறார்கள். எல்லா சீரியல் நாயகிகளும் புதிய குண்டு தாலியை ரவிக்கைக்குள் மறைத்தே வைத்திருக்கிறார்கள். எந்த நாயகிக்கும் வியர்ப்பதில்லை. எந்தத் தாலியும் நிறம் மாறுவதில்லை. இந்த உலகில் வீழ்த்தவே முடியாத சக்திமிக்க ஒரே பெரிய மறைபொருள் குண்டு தாலிதான்.

@Aadhavan Dheetchanya - ஹலோ ஸ்டாலின் ஆபீஸா, சிஎம் ஆபீஸ்ல இருந்து பேசுறோம். இன்னிக்கு என்ன உத்தரவு பிறப்பிக்கணும்னு எப்போ சொல்வீங்க? சிஎம் அறிவிக்கத் தயாராயிருக்கிறார்!

@Paadhasaari Vishwanathan - கடும் துன்பவேளையில் ஆகட்டும், கூடுதல் இன்ப வேளையில் ஆகட்டும், மனம் மரணத்தை யோசித்து உழல்கிறது!

@balebalu - பணம் பத்தும் செய்யும்! பத்து காரையும் மாற்றச் செய்யும்!

@Shruthi R - Me in menstrual cramp: எவன‌ போட்டு பொளக்கலாம்ன்னே இருக்கு. என் கெரகம் உன்னத் தவிர ஒருத்தனும் சிக்க மாட்டிங்கறான்...
மணாளர் in casual tone - இதுக்குதான் பாய் பெஸ்டி வெச்சுக்க சொன்னேன்...கடுப்பான me - ஆமா, நீ அப்படியே பெரிய யோக்கியன்தான்... சுமாரான பையன் commentக்கு ஹார்ட் போட்டாலே மூஞ்சு சுருங்கும் உனக்கு...மணாளர் in உசாரான டோன் - சரி பேபி... நீ ரெஸ்ட் எடு. நான் வந்துடறேன்...

மீ - போய்த்தொல...30 mins later----
மணாளர் - ஹாய்! உங்களுக்காக மினி டிபன் ஆர்டர் பண்ணிருக்கேன். அதைப் போய் வாங்கிக்கோங்க...
மீ - யாரைக்கேட்டு ஆர்டர் பண்ண..?மணாளர் with no idea - உங்களுக்கு பிடிக்குமேன்னு...காண்டெடுத்த மீ - என்னத்தையாவது கூகுள்ல மேய்ஞ்சிட்டு வந்து ஆர்டர் போட்டு உடுறது... அப்பறம் நான் குண்டானா கண்ட நாயும் என்ன பார்த்து நாக்கு மேல் பல்ல போட்டு பேசும். நீ மட்டும் ஒர்க்கவுட் பண்ணி ஸ்கோர் பண்ணுவ... அப்படித்தானே?

Poor மணாளர் - தெரியாம கால் பண்ணிட்டேன்... விடு பேபி. அதை என் பேர சொல்லி உன் தம்பிக்கு கொடுத்திடு...
எரிச்சலான மீ - ஏன் என் தம்பி சோத்துக்கு கதி கெட்டா இருக்கான்?
மணாளர் in no hope - இல்ல வேண்டாம். சரி தூக்கிப் போட்டுடு பேபி...
மீ - ஆமா, நான் சாப்பிடப் போறதில்லை. ரைட்டு, வை ஃபோன...

Yet another 30 mins later---
Same me after eating - மினி டிபன்ல பொங்கல் வைக்கல... வடையும் வைக்கல. எங்க போய் ஏமாந்து காசழிச்ச நீ?
மணாளர்‌ - ????

@Ramanujam Govindan - சில வார்த்தைகள் காலப்போக்கில் நேர் எதிரான அர்த்தம் பெற்றுவிடுகின்றன. அஃது ஒரு காவிய சோகம். A1 என்ற வார்த்தையும் அப்படித்தான். முன்பெல்லாம் பாராட்டுவதற்காகப் பயன்படுத்துவார்கள்-‘காஃபி ஏ ஒன்னா இருக்கு! உங்க பேச்சு ஏ ஒன்னா இருந்தது!’ என்று. ஹூம்! அது அந்தக் காலம்! A4 பேப்பரில் எழுதி அடங்காது!

@Gokul Prasad - ‘உங்களது கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது’ என இந்தியன் வங்கியிலிருந்து மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் வந்திருந்தது.
நான் அவர்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு ‘எனக்கு இந்தியன் வங்கியில் கணக்கே இல்லை’ என்றும், என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்தேன். அவர்கள் விவரங்களை சரிபார்த்துவிட்டு, ‘மன்னிக்கவும் சார். ஒரு சின்ன குழப்பம் நேர்ந்திருக்கிறது.

அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைப்பதால் உங்களது அலகாபாத் வங்கிக் கணக்கை இந்தியன் வங்கிக் கணக்காக மாற்றியிருக்கிறோம். அது தொடர்பான தகவலையே உங்களுக்குத் தெரியப்படுத்தினோம். நன்றி’ என்றபடி அவசர அவசரமாக அழைப்பைத் துண்டித்துவிட்டனர். எனக்கு அலகாபாத் வங்கியிலும் அக்கவுண்ட் இல்லையேடா?

@Kozhiyaar - இன்னும் டீயில் மிளகாய்த் தூளும், சாம்பார் தூளும் மட்டும் தான்யா போடலை! மற்றபடி தாளிக்குறதுக்கு போடுற எல்லாத்தையும் போட்டுத்தான் டீ வைக்கிறாங்க!

@RajeshBalachan5 - சின்ன மதர் நவ்: எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது... ஆரம்பிக்கலாமா குழந்த...