தாயார் சன்னதிக்கு ரூ.30 கோடி நிலத்தை வழங்கிய நடிகை!



சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலைப் போன்றே பத்மாவதி தாயாருக்கும் கோயில் கட்டப் போகிறார்கள். இதற்காக அதே தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மொத்தம் 14,880 சதுர அடியில் 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜகோபுரம், பிரகாரம், முகாம் மண்டபம் என கோயில் கட்டப்பட உள்ளது. திருப்பதி தேவஸ்தானமேதான் முன்னின்று அனைத்து திருப்பணிகளையும் செய்யப் போகிறது.

இந்த இடத்தின் இப்போதைய மதிப்பு ரூ.30 கோடி.அதை இலவசமாக கோயில் கட்ட வழங்கியிருக்கிறார் பழம்பெரும் நடிகையான காஞ்சனா.யெஸ். ‘காதலிக்க நேரமில்லை’ புகழ் காஞ்சனாவேதான்.இவர் ரூபாய் 80 கோடி மதிப்பிலான தனது சொத்துக்களை திருப்பதி ஏழுமலையானுக்கு ஏற்கெனவே எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காம்ஸ் பாப்பா