HOT கிசுகிசு



ஒரே பாட்டில்... ஒரே மடக்!

தமிழை விட பாலிவுட்டில் பறக்கவே விரும்புகிறார் அந்த தில்லி குல்ஃபி. அங்கே மட்டும்  திகட்டத் திகட்ட கிளாமர் காட்டவும் ஆர்வம் காட்டுகிறார்.அங்குள்ள டாப் ஹீரோ ஒருவரின் மனைவி, இவரது நெருங்கிய தோழி என்பதால் தொடர்ந்து அந்த ஹீரோவின் படங்களில் ஆட்டோமோடில் கமிட் ஆகிவிடுகிறார் நடிகை. ஆனால், விஷயம் அதுவல்ல. ஒரு காலத்தில் ஸ்போர்ட்ஸில் சாம்பியனான பொண்ணு, இப்போது சரக்கில்லாமல் இருப்பதில்லையாம். அதுவும் எப்படி? ‘ஒரே பாட்டில் ஒரே மடக்...’ ரேஞ்சுக்கு வாட்டர் கேர்ளாக மாறிவிட்டார்.

ஹீரோவின் நம்பரை ப்ளாக் செய்த நடிகை!

பொண்ணு இருப்பது லண்டனில். ஆனால், பாலிவுட்டில்தான் படபடக்குது ஜின்னு. இன்ஸ்டாவில் பிகினியோடு, ஸ்ட்ரீமிங் ட்ராக்கில் செம தாராளமாகவும் குளுகுளுக்கும் நடிகையின் மீது நம்மூர் ஹீரோவுக்கு ஒரு கண்ணு. தன் முந்தைய படத்திற்கே அவரை ஜோடியாக்க முயற்சித்தார் ஹீரோ. ஆனால், நடிகையோ ‘ஐ ஹேட் சவுத் இண்டஸ்ட்ரீ’ என ஒன் லைன் பன்ச்சில் போனை கட் செய்துவிட்டார்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, லேட்டஸ்ட்டாக மறுபடியும் அதே ஹீரோ அவருக்கு தூது விட்டு பார்த்தார். நடிகையோ அப்பவும் இப்பவும் ஒரே பேச்சுதான் என்று சொல்லி ஹீரோவின் நம்பரை ப்ளாக் செய்து விட்டாராம்!

நியூட் போட்டோ கேட்ட ரசிகர்!

அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் தெலுங்கில் சூப்பர் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் ஹீரோயின், சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களை சந்திக்க ‘லைவ்’வினார். ‘யூ ஆர் ச்சோ ஸ்வீட்...’ ஜொள்ளுகளைத் தாண்டி, ஒரு ரசிகர் ‘உங்க நியூட் போட்டோவை பதிவிடுங்களேன்’ என ‘ஏ’டாகூட ரேஞ்சில் கேட்டுவிட்டார். ஆனாலும் நடிகை கோபத்தை வெளிக்காட்டாமல் ‘தன் கால் பாதங்கள் மட்டும்’ உள்ள ஒரு போட்டோவை பதிவிட்டார்.
புத்திசாலி நடிகை!

ஃபர்ஸ்ட் காப்பி என்னும் ஏமாற்று வேலை!

புரொட்யூசராகவும் களமிறங்கி சூடு கண்ட ஹீரோ, இப்போது வெளி தயாரிப்பில் மூன்று படங்களில் பரபரக்கிறார். ஆனாலும் அவருக்கு பணம் போதாததால் மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறார். என்ன குழப்பமாக இருக்கிறதா? நோ குழப்பம். தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் புரொட்யூசர்களிடம் ‘உங்க பட்ஜெட் என்ன? அதை விட அஞ்சோ பத்தோ குறைவா மொத்த படத்தையும் என் கம்பெனி தயாரிப்பிலேயே ஃபர்ஸ்ட் காப்பில நானே ரெடி பண்ணி கொடுத்துடுறேன். உங்களுக்கு செலவும் டென்ஷனும் மிச்சம். டீல் ஓகேவா?’ என கேட்டு வருகிறாராம் ஹீரோ.

கணவருக்கு மனைவி போட்ட கண்டிஷன்!

டோலிவுட்டில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட நடிகைக்கு, அவரது கணவர் + நடிகர் எக்கச்சக்க சுதந்திரம் கொடுத்தது போல, தனக்கும் தன் மனைவி கொடுப்பார் என நினைத்தார் கணவர். ஆனால், நடிகையோ கணவருக்கு கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டிருக்கிறார். ‘ஒரு நடிகையுடன் ஒரு படம்தான். மீண்டும் அதே காம்பினேஷன் வரக்கூடாது. தொடரவும் கூடாது’ என்பது அதில் ஹைலைட்டாம்.

இப்படியொரு கண்டிஷன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்... படத்துக்குப் படம் புது ஹீரோயின் என்பது நான் நினைத்தும் பார்க்காதது... என்றெல்லாம் மனதுக்குள் துள்ளிக் குதித்த கணவர், சும்மா வெளிப்பார்வைக்கு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ஓகே பேபி’ என சொல்லியிருக்கிறார்!

ஷியஸ்