Data Corner
 *10,000 பேரில் வெறும் 5 பேருக்கு மட்டுமே மருத்துவமனை வசதி இந்தியாவில் இருக்கிறது. *35% உயர்ந்துள்ளது இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு. இதை கிட்டத்தட்ட 13.80 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.94,000 என பிரித்து வழங்க முடியும் என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வு தெரிவிக்கிறது.
*60% உயர்ந்திருக்கிறது பெண்களுக்கு எதிரான வன்முறை. இது கடந்த ஓர் ஆண்டில் மட்டும்.
*7,000 மொழிகள் அழியும் ஆபத்தில் உள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. அதாவது உலக மொழிகளில் 40%.
*8% மட்டுமே ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சியாகின்றன.
*153 யானைகள் கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளன.
*7%, அல்லது 9.1 கோடி மக்கள், இந்தியாவில் அடிப்படைத் தேவையான நீர் கிடைக்காமல் உள்ளனர்.
*80% முகத்தில் உள்ள உணர்ச்சிகள் மூலமாகத்தான் ஒருவருடன் நடைபெறும் உரையாடல் நடக்கிறது.
அன்னம் அரசு
|