HOT கிசுகிசு



கண்டிஷன்ஸ் அப்ளை நடிகை!

தமிழில் நடித்து முடித்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடிக்க, ‘ஏதாவது ரிலீஸ் ஆகட்டும்... அதன்பின்னர் புது புராஜெக்ட்டில் கமிட் செய்து கொள்ளலாம்...’ என்ற மைண்ட்செட்டில் இங்கே அடுத்து எதுவும் கமிட் ஆகாமல் இருக்கிறார் நடிகை.

இதற்கிடையே இப்போது தெலுங்கில் ரீமேக்காகி வரும் படத்தில் கமிட் ஆகியிருந்தார் அவர். அங்கே நடிகை கொடுத்த ‘கண்டிஷன்ஸ் அப்ளை’யினால் அதிலிருந்து இவரை நீக்கிவிட்டு, ஒரிஜினலில் நடித்தவரையே கமிட் செய்து ஷூட்டும் போய்விட்டார்கள்.

இதில் ஆச்சரியம், இதற்கெல்லாம் நடிகை கவலையே படவில்லை என்பதுதானாம். ‘வந்தால் சந்தோஷம்... வரலைனா ரொம்ப சந்தோஷம்’ பாலிசி போல!   

கதை திருட்டில் சிக்கிய ஹீரோ!

சமீபத்தில் கதை திருட்டு பிரச்சினையில் சிக்கி, பஞ்சாயத்துக்குப் பின், சம்பந்தப்பட்டவருக்கு நியாயமும் கிடைத்தது. அதைப் போல, சக்சஸுக்கு போராடும் ஹீரோ படத்திற்கும் பிரச்னை எழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத ஹீரோ திகைப்பில் ஆழ, ஹீரோவான மகனை ஆறுதல் படுத்தியதோடு, அந்தப் பிரச்னையை சுமுகமாகவும் கையாண்டார் வில்லனாக இருந்து ஹீரோவாக உயர்ந்து இப்பொழுது குணச்சித்திரத்தில் கலக்கும் அந்தத் தந்தை.

இந்த விஷயம் வெளியே கசியும் முன்னரே, ஒரிஜினல் ஆசாமியை கூப்பிட்டு, அவரது எதிர்பார்ப்பு என்ன என்பதைக் கேட்டு, அதற்கேற்ப தக்க சன்மானமும் கொடுத்து விஷயத்தை காதும் காதுமாகவே ஆஃப் செய்துவிட்டனராம்!.

ஹீரோவுக்கு என்னாச்சு!

கொஞ்ச நாட்களாகவே சைலண்ட் மோடில் இருக்கும் ஹீரோ அவர். இப்போது ரெண்டு படங்களில் பரபரக்கிறார். அதில் ஒன்று ரிலீஸுக்கு ரெடி. இன்னொன்றின் படம் பாதி கிணறைத் தாண்டிவிட்டது. அதன் ஷூட்டுக்கு ஆரம்பத்தில் சரியாக வந்து நின்றவர் இப்போது ஸ்பாட்டிற்கு லேட்டாக வருகிறார். காலை ஏழு மணிக்கு முதல் ஷாட்டுக்காக கேமராவை ஆன் செய்து விட்டு ஹீரோவைத் தேடினால், அந்தி சாயும்போது வந்து நிற்கிறாராம்.
 
இதைவிட கொடுமையாக தொடர்ந்து மூன்று நாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்புக்கும் மட்டம் போட்டிருக்கிறார். ‘நல்லாத்தானே இருந்தார்... சக்கரம் மாதிரி சரியாதானே சுத்திட்டு இருந்தார்... இப்ப என்னாச்சு இவருக்கு...’ என முணுமுணுக்கிறது யூனிட்.

இயக்குநரை திட்டும் அசிஸ்டெண்ட்ஸ்!

உதவி இயக்குநர்கள் வட்டாரத்தில் அந்த டைரக்டரைப் பற்றித்தான் திட்டித் தீர்க்கிறார்கள். ஒவ்வொரு வீக் எண்டிலும் குஷியாகும் டைரக்டர், அதே மூடில் தன் சக இயக்குநர் நண்பர்களை கூடாரத்திற்குக் கூப்பிட்டு விடிய விடிய தீர்த்தவாரி நடத்தி மகிழ்கிறாராம். ஒவ்வொரு மீட்டிலும் மினிமம் ஆறேழு பேர் ஆஜராம்.

அன்றைய மிட்நைட்டில் எனர்ஜி மிகுதியானவர் அசிஸ்டெண்ட்டுகளையும் தூங்கவிடாமல் எழுப்பி, ‘ஆஃப்பாயில் அஞ்சு, ஆம்லேட்டு ஆறு’ என அர்த்த ராத்திரியில் சைட் டிஷ் கேட்டு தொல்லைப்படுத்து கிறாராம். ‘இதெல்லாம் பரவாயில்ல. அவர் எங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து மூணு மாசத்துக்கு மேல ஆச்சு’ என காதைக் கடிக்கிறார்கள் உதவி யாளர்கள்.

டிஸ்கஷனுக்கு இவ்வளவு!

வாரத்திற்கு ஒருமுறை போட்டோஷூட் செய்யும் நடிகைகளின் லிஸ்ட்டில் இவரும் இருக்கிறார். படங்களை விட, கடைதிறப்பு விழாக்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர் அவர்.

அப்படிப்பட்டவர் இப்போது கேரியர் விஷயத்தில் க்ளீயர் கட்டாக இருக்கிறாராம். அவரை கமிட் பண்ண வருபவர்களிடம், ‘படத்திற்கான பேமென்ட் எவ்வளவு’ என கேட்பதுடன், ‘டிஸ்கஷனுக்கும் இருக்க வேண்டுமெனில்... இவ்வளவு’ என கறாராகச் சொல்லி கறந்து விடுகிறாராம்.  எதுல்... புதுல்... என இண்டஸ்ட்ரி வியக்கிறது. புரிஞ்சவங்க பிஸ்தா!

ஷியஸ்