வலைப்பேச்சு@Malarko65562105 - ஒவ்வொரு வருடமும் எந்தப் பழக்கத்தை விட்டோம்; எத்தனை பேரை விலக்கினோம் என்பதல்ல வாழ்க்கை... ஒவ்வொரு வருடமும் என்ன கற்றுக்கொண்டோம்; என்ன சாதித்தோம் என்பதே வாழ்க்கை!

@Kanchana_itZ - ஒருவரின் குணம் பிடிக்கவில்லையேல் மனதளவில் வெறுத்துக் கொள்ளுங்கள். அவர் திறமைக்கும் எழுத்துக்கும் மரியாதை கொடுக்க மறக்காதீர்.

@Gokul Prasad - “குழந்தைங்க பார்க்கற மாதிரியான நல்ல அனிமேஷன் படங்களுக்கு லிங்க் அனுப்பேன்?”“யாருக்கு தேவைப்படுது?”“எம் புள்ளைக்கு காட்றதுக்கு...”“உனக்கு இன்னும் கல்யாணமே ஆவலியே?”“இல்ல, டாரண்ட் சைட்ஸ் எல்லாம் க்ளோஸ் செஞ்சிட்டு இருக்கானுக.
இப்பவே டவுன்லோட் பண்ணிடறது நல்லது தானே?”“அடேய், கொரோனா குட்டி போட்ருக்குன்னு அவனவன் பொழைப்போமா இல்லியான்னு தெரியாம ஓடிட்டு இருக்கான்... பொறக்காத குழந்தைக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கியா? ஒரு மனுசனுக்கு இவ்வளவு தொலைநோக்குப் பார்வை ஆகாதுடா...”

@THARZIKA - காயப்படுத்தும் உறவுகளை விட ஆறுதல் தரும் தனிமை மேல்.

@rajatwetz90 - ஆசைப்படுவதை எல்லாம் அடைய நினைக்காமல் சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டால் வாழ்க்கை நலமாக இருக்கும்!

@asdbharathi - பறவைகள் வெகுதூரம் பறக்கும்போது எந்த சுமைகளையும் கொண்டு செல்வதில்லை. தீய எண்ணங்களை இறக்கி வைத்தால்தான் உயர உயரப் பறக்க முடியும்.

@AnjaliTwitz - எவ்வளவு புரிதலுடன் இருந்தாலும்... காலம், சில உறவைப் பிரித்துவிடும்... சில உறவைப் பறித்துவிடும்..!
@Kannan_Twitz - அத்தனைக்கும் பிறகு நமக்கு இப்போ என்னதான் வேணும்னு நமக்கு நாமே யோசிச்சிப் பார்த்தா எதுவுமே கிடைக்காது!
அவ்வளவுதான் வாழ்க்கை..!

@ival_Sagi - பேரன்பு பொங்கி வழியும் அனைத்து கணங்களுக்கும் அன்னையின் சாயல்.

@Paadhasaari Vishwanathan - அந்திசாய்ந்த வேளையில் அந்த ஒன்பது மாடி அடுக்ககத்தில், கார் பார்க்கிங் ஒட்டிய நடைபாதையில், இந்தியன் தாத்தா - பாட்டி போல இருந்த ஈருயிர்கள் நடை போயின.பாட்டி சொன்னது: ‘‘உங்களை மத்தவங்க திட்டீரக்கூடாதேன்னுதான் நானே உங்களைத் திட்டி எச்சரிக்கறேன் அடிக்கடி... நாற்பத்தஞ்சு வருஷம் கூட வாழ்ந்தும் இன்னும் என்னைப் புரியலே ஒங்களுக்கு...’’

@jokerr_twitzz - எத்தனை முறை காயப்படுத்தினாலும் நாம் திரும்பி வந்துடுவோம்ங்கிற நம்பிக்கைலதான் மீண்டும் மீண்டும் காயப்படுத்துறாங்க நாம் அன்பு கொள்ளும் உறவுகள்...

@pugalendhipugal - ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது இலட்சியம்..!

@_Ragul_im - எத்தனை எத்தனை அவமானங்களைக் கடந்து இருப்பார்கள் இப்போது உச்சத்தில் இருப்பவர்கள்... உண்மைதான் ‘பொறுமை இழந்துவிடாதே’ என்ற வார்த்தை...

@manuvirothi - நீங்க மட்டும் பிரதமர் வேட்பாளரை முன்னமே அறிவிப்பீங்க... ஆனா, நாங்க முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் எதிர்ப்பீர்களான்னு கேளுங்க எபசா!

@Mani Mkmani - நாம் வாழ்கிற சமூக வாழ்வு மொத்தமும் அச்சத்தின் மீதுதான் அமைந்திருக்கிறது. ஒரு தனி மனிதனின் ஆடை அலங்காரம், கூட்டத்தின் மமதை என்பதான ஆயுத அணிகலன்களை உரித்தால், அவன் அறையின் மூலைக்கு பாய்ந்து ஒதுங்கி நடுங்குவான்.
அவன் தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை தன்னைத்தானே கூட பார்த்துக் கொள்வதில்லை. பயம்!

@Perundevi Perundevi - சென்ற ஆண்டைப் பற்றிப் பேசும் எவரும் இதைப் போல ஒரு மோசமான ஆண்டைப் பார்த்ததில்லை என்றுதான் சொல்வார்கள். உலகமெங்கும் அவலக்காட்சிகள், தனிப்பட்ட விதத்தில் எதிர்கொண்ட இழப்புகள் பற்பல. ஆனாலும் சென்ற ஆண்டு கற்றுத்தந்தது அதிகம். எந்த வருடத்தையும்விட.

முதலாவது, நான், நாம் யார், என்ன பெறுமானம் என்று காட்டித்தந்தது. படித்தெல்லாம் புரிந்துகொள்ள முடியாத insignificance. சென்ற வருடக் கோப்பையின் கசப்பை நிதானமாக அருந்திய எவருக்கும் தற்பெருமை, தன்னுடைய அருமை பெருமையைப் பேசுவது சிரமமாக இருக்கும். அருந்தாதவர்கள் முதல் பாடத்தையே கற்கவில்லை.

இரண்டாவது, நேரத்தின் அருமை. இதைச் சொல்லி மாளாது. செய்து முடிக்காத பலவற்றுக்காக எத்தனை நாள் கலங்கிப்போயிருப்போம்... குடும்ப விவகாரங்களிலும் சரி, கலை, இலக்கியச் செயற்பாடுகளிலும் சரி. சூட்டுத் தழும்பு போல இந்தப் பாடத்தை மனதில் இழுத்து வைத்திருக்கிறது சென்ற ஆண்டு.

மூன்றாவது, பிரியத்தின் அருமை. யார் யார் எப்படி என்று கற்றுக்கொடுத்தது. உண்மையில் சென்ற வருடத்தில் ஏதோ ஒரு கணத்திலாவது முகங்களுக்குப் பின்னால் இருந்த முகங்கள் தெரிந்திருக்கும். அச்சப்பட்டிருப்போம், இவ்வளவுதான் என்று கசந்திருப்போம், இவ்வளவா என்று ஆச்சரியப்பட்டிருப்போம்.

சென்ற வருடம் உறவுகளை நெருப்பில் புடம்போட்ட வருடம். சில உறவுகளை சென்ற வருடம் முடித்து வைத்திருக்கும். நாம் எதிர்பாராத வகையில் சில உறவுகள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவை நம்மோடு கடைசி வரையில் வரும். சென்ற வருடம் அத்தகையது.
சென்ற வருடத்தை வணங்குகிறேன் கண்ணீருக்கும் அடிகளுக்கும் நெருப்புக்கும் பூக்களுக்கும் நடுவே கற்றுத் தந்ததற்காக. இனி ஒரு வருடம் இப்படி
வராது.

@Shruthi R - இந்தியா கடைசியாக யாரிடமாவது இருந்து பாடம் கற்கணும்னு நாம எதிர்பார்த்தோம்னா அது அமெரிக்காவிடமிருந்துதான்.
உலகிலேயே அதீத தேசப்பற்றை முன்வைத்து மக்களை ஏமாற்றும் நாடு எது தெரியுமா? அமெரிக்காதான். அமெரிக்க படங்களில் - அமெரிக்க தெருக்களில் - சீரியல்களில் - புத்தகங்களில் தேவையில்லாமல் அமெரிக்காவைப் பற்றி பெருமை பீற்றுவார்கள். உலகையே அவர்கள் ஆளுவதுபோல ஒரு கற்பனை மாயையைப் பரப்புவர். அவர்களின் cartoonஇல் இருந்து மார்வெல் படங்கள் வரை உலகம் அழியும்போது அமெரிக்கா charge எடுத்து உலகைக் காப்பாற்றுவதைப் போன்ற திணிப்பைப் பார்க்க முடியும்.

நிஜத்தில் அமெரிக்கா போல உலக வளங்களைச் சூறையாடிய நாட்டை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. 20ம் நூற்றாண்டிலிருந்து பிற நாடுகளில் அமெரிக்கா செய்த அலப்பறைகள் எத்தனை... எத்தனை என்று Google செய்து பாருங்கள் தெரியும்.

அமெரிக்க பகட்டையும் சந்தைப்படுத்துதலை நம்பி Starbucks, MacDonald என்று காசைக் கொட்டி தேவையற்ற வீட்டு சாதனங்களை வாங்கி, 6 மாசத்துக்கு ஒரு முறை ஃபோனை மாற்றி, வருடத்திற்கு நான்கு ஹெட்செட் மாற்றி, குப்பைகளை உருவாக்கி, அதை கடல்களில் கொட்டி, உயிரினங்களையும் மனிதர்களையும் அழித்து வாழும் வாழ்க்கை முறை பற்றி சிறிது யோசனை கூட இல்லாமல் அமெரிக்க குடும்ப அமைப்பையும் இந்திய குடும்ப அமைப்பையும் ஒப்பிட்டுப் பேசி வருகிறோம். நீங்க ஒப்பிடறதெல்லாம் சரி... அதுக்கு அமெரிக்காதானா கிடச்சுது உங்களுக்கு?

@Firdaus_Tweetz - யாசகம் கேட்டுப் பெறும் அன்பில் உண்மை இருக்காது... திணிக்கப்படும் அன்பில் மதிப்பு இருக்காது..!

@THARZIKA - தேவைகள் எல்லாம் நிறைவேறிய பிறகுதான் பலர் தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

@எழுத்தாளர் டாக்டர் கே.ஜி.ஜவஹர் - யோசித்துப் பார்த்தால் வெறும் ஐந்து மாதங்களுடன் 2020 கடந்துவிட்டது.
January, February, March, Lockdown, December.

@Ela_maran09 - நம்மள ரொம்ப நல்லா புரிஞ்சிகிட்ட ஒருத்தர் நம்ம கூட இருக்கிறது, பெரு
மகிழ்ச்சியானது மட்டுமல்ல, பேராபத்தானதும் கூட...

@deepaa kumaran - மன்னிக்கிறவன் மனுஷன்... மனதைக் கல்லாக்கிக்கிட்டு மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்...

@Lakshmi Saravanakumar - பசி தீர்ந்தபின் தொட்டுக்கொள்ளும் உபரி உணவு வகைகள் ஒவ்வொன்றும் ஆசைக்கு ஒருமுறை சுவைத்துப் பார்க்க மட்டுமே.