ஹாட் கிசுகிசு



நடிகைக்கு பரிசாகக் கிடைத்த வீடு!

அந்த ‘கோல்ஃப்’ ஃபிஷ் பற்றித்தான் இப்போது டோலிவுட்டில் பேச்சு. மும்பையில் போதை விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டதைக் கூட  எல்லோரும் மறந்தே விட்டார்கள். அது விஷயமல்ல. அந்த கோஃல்ப் நடிகை இப்போது ஹைதராபாத்தில் புது வீடு வாங்கியிருக்கிறார். அவருக்கு அங்கே ஏற்கெனவே சூப்பர் பங்களா இருக்கிறதாம். ‘அப்புறம் ஏன் வீடு வாங்கியிருக்கிறார்?’ என வியக்கிறீர்களா? நியாயம்தான். சின்ன திருத்தம். வீடு வாங்க வில்லை. கிஃப்ட்டாகக் கிடைத்தது அது என்கிறார்கள்!ஆம். தாரளாமாக இம்ப்ரஸ் ஆகும் புரொட்யூசர் ஒருவர் கொடுத்த பரிசு அது என்கிறது டோலிவுட்.  

கிரிக்கெட் வீரர் பார்ட்டியில் நடிகை!

‘மயிலிறகே... மயிலிறகே...’ என இங்கே சிறகடித்தவர், இப்போது இந்தியில் நாலைந்து படங்களில் மணம் வீசுவதால் பூர்வீக ஊரான தில்லியை காலி செய்துவிட்டு மும்பையில்தான் வாசம் செய்கிறார். அங்கேயும் பார்ட்டி கல்ச்சரில் பெயரெடுத்தவர், சமீபத்தில் சிக்கலில் மாட்டியிருக்கிறார். கோவிட் விதிகளை மீறி பார்ட்டி கொண்டாடிய கிரிக்கெட் வீரரின் பார்ட்டியில் நடிகையும் மினுமினுத்திருக்கிறார். அங்கே போதை தலைக்கேறியதில் பாலிவுட் ஹீரோவின்  மனைவியுடன் கைகோர்த்து தள்ளாடியதில்தான், விவகாரம் வீதிக்கு வந்திருக்கிறது.

டிப்ரஷனில் நடிகை!

ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடித்தாலும், தொடர்ந்து ஃப்ளாப் நிலவியதில் உற்சாகம் தளர்ந்திருக்கிறார் நடிகை. சமீபத்தில் அவரை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். ஆளே உருமாறி, முகமே களையிழந்து டிப்ரஷனில் இருப்பவர் போல தெரிகிறார் அவர் என உச் கொட்டுகிறார்கள். ‘சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம்டா... ஹெல்த்தை பார்த்துக்கோடா... வால் இருந்தால்தான் வால் பேப்பர் பண்ண முடியும்’ என அட்வைஸும் சொல்லி திரும்பியிருக்கிறார்கள்.  

ஷியஸ்