ஏலியன்ஸ் குறித்து டிரம்பிற்கு தெரியும்!



வேற்றுகிரக வாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் (Haim Eshed) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்! 1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் பாதுகாப்பு விண்வெளி திட்டத்தின் தலைவராக பணியாற்றியுள்ள 87 வயதான எஷெட், “வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான். அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு முன்னரே தொடங்கி விட்டது. பூமியில் சோதனை நடத்துவதற்கான ஓர் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்!வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்தார். ஆனால், மக்கள் அதற்கு தயாராகவில்லை என்று வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது!

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்திருக்கிறது. ஆதாரங்கள் ஏதுமின்றி நான் கூறும் தகவல்களை தற்போது யாரும் நம்பாமல் போகலாம். ஆனால், விரைவில் மக்கள் உண்மையை அறிவார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை நான் கூறியிருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பேன்...” என்று கூறியுள்ளார்!இது டுபாக்கூரா என்பது போகப் போகத்தான் தெரியும்!

அன்னம் அரசு