HOT கிசு கிசு



நான் தீவுக்கு வரக்கூடாதா..?!

தன்னை விட ஜூனியர்கள் ஐலேண்ட் பறந்து, இன்ஸ்டாவில் விதவிதமாக பிகினி போட்டோக்களை தெளிக்கவும், முகமும் கண்களும் ஜிவ்வென எகிறிவிட்டதாம் அந்த ‘வெள்ளை வெளேர்’ நடிகைக்கு! அதே ஜிவ்வில் தீவுக்கே போன்செய்து, ‘உங்க லிஸ்ட்ல என் பெயர் விடுபட்டிடுச்சு போல... எப்போ நான் கிளம்பி வரணும் டூட்’ என வாய்விட்டு கேட்டும் விட்டிருக்கிறார். அப்புறமென்ன? ‘வவ்வால் மீன்’ வலிய வந்து மாட்டுதே என்ற குஷியில் நடிகைக்கும் வெல்கம் கொடுத்துவிட்டதாம் தீவு. அங்கேயும் லவ்வாகி திரும்பி வந்திருக்கிறார் நடிகை.

சைனா செட் மச்சான்!

‘இந்தியில கூப்டாக... ‘ங்ணா’னாவுக்கே மறுபடியும் பண்ணச் சொல்லி கூப்புட்டாக...’ என அடிப்பொடிகள் வைத்து கூவும் இயக்குநரின் மச்சான் பற்றிதான் கோலிவுட்டில் சுத்துது பேச்சு. கொஞ்சம் இண்டீரியர் லைனில் இருப்பவர். அவர் சமீபத்தில் ‘மிஸ்’ நடிகையின் வீட்டை அழகுபடுத்திக் கொடுத்திருக்கிறார். அங்கே இவர் ஃபிட்டிங் செய்தவை எல்லாமே சைனா பீஸ்கள்தானாம். ஆனாலும் ஒர்க்கிங் சார்ஜ் ஆக அரை கோடியை பில் போட்டு வாங்கிவிட்டாராம் மச்சான். இதை சற்றும் எதிர்பார்க்காத நடிகை, டைரக்டரிடமே சொல்லி ஃபீலாக, அவரோ கூலாக ‘அடுத்த படத்துல பாத்துக்கலாம்... டோண்ட் வொர்ரி’ என ஆறுதல் சொல்லிவிட்டாராம்.

பாலீஷான நடிகை!

விவாகரத்துக்குப் பின், பாட்டிலும் கையுமாக இருந்த நடிகை, இப்போது செம பாலீஷாகியிருக்கிறார். முன்பிருந்த பொதபொத உடம்பும் மிஸ்ஸிங். ஃபேஸும், பேஷ் பேஷ் ரகமாக மின்னுகிறதாம். நோ கிறக்கம். நோ சுருக்கம். எல்லாமே மேஜிக்கானது போல் சகலரும் வியக்கிறார்கள். இத்தனைக்கும் நடிகை யாரிடமும் பேசுவதில்லை. யார்வம்பு தும்புக்கும் போகும் அளவுக்கு அவருக்கு எந்த வட்டமும் இல்லை. ஆனாலும், நாலா திசையில் இருந்தும் நடிகையின் ஷைனிங்கைப் பார்த்து, ‘வாவ்’ கொட்டுகிறார்கள்.

ஷியஸ்