Data Corner



*99.1% பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாவதில்லை.

*1,00,000  கோடி டாலர் - உலகம் முழுவதும் நடைபெறும் சைபர் குற்றங்களால் ஏற்படும் இழப்பு என்று மென்பொருளுக்கு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் உருவாக்கும் மெக்கஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது.

*2050ம் ஆண்டுக்குள் ஆசியாவில் 100 கோடிப் பேர் வரை பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவர் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

*69,258 ‘நீர்-தரத்தால் பாதிக்கப்பட்ட வாழ்விடங்கள்’ இந்தியாவில் உள்ளன, இது கிட்டத்தட்ட 4.6 கோடி மக்களை பாதிக்கிறது.

*2,391 தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

*2,96,000 பேர் உலகம் முழுவதும் 2018ம் ஆண்டு மட்டும் வெப்பமயமாதலால் இறந்துள்ளனர். அனைவருமே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

*153 நாடுகளில் 112வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு - 2020ன் கணக்கு இது.

*42.6% பெண்களும், 62.16% ஆண்களும் மட்டுமே இந்தியாவில் இணையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அன்னம் அரசு