10-15 வயது குறையலாம்!



எத்தனை வயதானாலும் அந்த வயதிலிருந்து பத்து அல்லது பதினைந்து வயது குறைவாகவும் பார்க்க அழகாகவும் தெரியலாம் என்ற ஆஃபர் முன்வைக்கப்பட்டால், யார்தான் வேண்டாம் என்பார்கள்!வேம்பையர் ஃபேஷியல், வேம்பையர் ஃபேஸ்லிஃப்ட்... என்றெல்லாம் அழைக்கப்படும் இதை அதிநவீன தொழில் நுட்பத்துடன், குறிப்பாக மருத்துவ ரீதியாக செய்து வருகின்றனர் ரீஜென் ஏஸ்தடிக் (Regen Aesthetic) மருத்துவக் குழுவினர்.

‘‘வேம்பையர் (ரத்தக் காட்டேரி) என்றாலே அவங்களுக்கு வயதில்லை என்பதுதான் அர்த்தம்...’’ புன்னகையுடன் பேசத் தொடங்கினார் டாக்டர் இளங்கோவன் (MD (AB), PGDCC, AB Internal Medicine, USA Aesthetic  & Regenerative Medicine, USA Faculty- Indian Institute of Aesthetic  Medicine, Pune).
‘‘ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அதிலேயே வயது நின்னுடும். அதனாலேயே இந்த சிகிச்சை முறைக்கு வேம்பையர் எனப் பெயர். ஊசிகள் பயன்படுத்தி இரத்த பிளேட்லெட்கள் கொண்டு செய்யப்படும் சிகிச்சை இது.

இதற்கு முறையான சான்றிதழ் அமெரிக்காவில்தான் உண்டு. இங்கே பலரும் வேம்பையர் என்ற பிராண்ட் பெயரை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். சரியான பயிற்சி இல்லாமல் இந்த சிகிச்சையைக் கொடுத்தால் பெரிய பிரச்னை உண்டாகும். 
ரொம்ப வயதான தோற்றமாகத் தெரிபவர்களும், முகத்தின் தோல் தளர்வாக உள்ளவர்களும், ரெட்டை நாடி, சுருக்கங்கள் காணப்படுகிறவர்களும்... என எல்லா பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு உண்டு.முகம் மட்டுமல்ல, உடலின் தளர்வான தசைகளால் ஏற்படும் தொய்வு; அதிக உடல் எடைக் குறைவால் உண்டாகும் தோல் தளர்வுகள்... என அனைத்தையும் இந்த சிகிச்சை வழியே சரி செய்யலாம்.

ஆனால், எப்படி தரமாகவும் பூரணமாகவும் செய்கிறோம் என்பதே எங்களின் சிறப்பு...’’ கண்கள் மின்ன சிரிக்கிறார் டாக்டர் இளங்கோவன்.‘‘வேம்பையர் ஃபேஷியல், ஃபேஸ் லிஃப்டிங் மற்றும் வேம்பையர் மார்பக லிஃப்டிங்... ஆகிய அனைத்தும் முகத்தினுடைய தோல் மற்றும் திசுக்கள், நரம்புகள் என ரத்த நாளங்களைத் தூண்டி இறந்த செல்களை நீக்கி செய்யும் முறைதான்.

இதற்கு சரியான நரம்புகள், திசுக்களை விட்டு மாற்றுவதுதான் முக்கியமான செயல். ஒன்று தெரியுமா... தவறாகச் செய்தால் கண் பார்வைக்குக் கூட பிரச்னை ஏற்படும்...’’ என்னும் டாக்டர் இளங்கோவன் இந்தத் துறையில் 35 வருடங்களாக இருக்கிறார். ‘‘இந்தியாவில் மட்டுமல்ல... அமெரிக்கா சென்றும் இதற்கான பிரத்யேக படிப்பை படித்திருக்கிறோம். என் ஜூனியர்களும் அப்படித்தான். முறையான படிப்பும் பயிற்சிகளும் மேற்கொண்ட பிறகே சிகிச்சை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இங்கு சில மேக்கப் ஆர்ட்டிஸ்டுகளும், மருத்துவம் படிக்காத மக்களும் இதைச் செய்கிறார்கள். வருத்தமாக இருக்கிறது. மக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். போலிகளிடம் ஏமாறாதீர்கள்...’’ அழுத்தமாகச் சொல்லும் டாக்டர் இளங்கோவன், முன்னெச்சரிக்கை சிகிச்சைதான் தங்கள் வேலை என்கிறார்.

‘‘அதாவது பிரச்னை ஆரம்பிக்கும் முன் அல்லது ஆரம்பிக்கும் போதே கொடுக்கும் சிகிச்சை. PRP எனப்படும் பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா சிகிச்சை.சிகிச்சைக்கு வருபவர்களின் ஆரோக்கியமான இரத்தத்தைக் கொண்டே நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். குறிப்பாக முடி உதிர்தல் பிரச்னைக்கான சிகிச்சையில் இதை அதிகம் பயன்படுத்துகிறோம்.

இதே பாணியிலேயே முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி, சிகிச்சைக்கு வருபவர்களின் ஆரோக்கியமான இரத்தத்தைக் கொண்டே அவர்களது முகத்தை இளமையாக மாற்றுகிறோம்.அடுத்து பிரசவத்திற்குப் பிறகான உடல் திருத்தம், தோல் பளபளப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சையே ரீஜென்ஹெல்த் (RegenHealth) மற்றும் ரீஜென்இன்டிமஸி (RegenIntimacy).

ரிஜென்ஹெல்த் மூலம் நாள் பட்ட ஆறாத காயங்கள், சர்க்கரை நோயால் உண்டாகும் பிரச்னைகள் - குறிப்பாக உடல் எனர்ஜி குறைவு, மைகிரெயின், குறைவான எதிர்ப்புசக்தி, உடல் எடை குறைக்க முடியாத அளவிற்கு கடினமான கொழுப்பு பிரச்னை, நாள்பட்ட எலும்பு வலிகள், மூட்டு இணைப்புகளில் தளர்வு அல்லது கடினத் தன்மை, ஹைபர் டென்ஷன்... என நிறைய பிரச்னைகளுக்கு லேசர், கிரியோலிபோலிஸிஸ், மெடிகேஷன் போன்ற சிகிச்சை மூலம் தீர்வளிக்கிறோம்.  

இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் அடுத்த பிரச்னை பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி. இதனால் ஏற்படும் பிரச்னைகள் துவங்கி கர்ப்ப காலத்துக்குப் பிறகான பிறப்புறுப்பு மாற்றங்கள், தோல் தொய்வு... ஆகிய பிரச்னைகளை ஓ-ஷாட் என்னும் சிகிச்சை மூலம் சரி செய்து மீண்டும் தாம்பத்ய வாழ்க்கையில் இன்பமும், நிறைவும் கிடைக்கச் செய்கிறோம். ஆண்களுக்கு பி-ஷாட் சிகிச்சை மூலம் பாலின பிரச்னைகள் பலவற்றுக்கும் சிகிச்சை உள்ளது.

மாம்மி மேக்கோவர் (RegenPost-Pregnancy Revival (Mommy Make-over)) என்னும் சிகிச்சை மூலம் எக்ஸ்க்ளூசிவ்வாக பெண்களின் பிரசவத்திற்குப் பிறகான அத்தனை உடல் சிதை மாற்றங்கள், ஹார்மோன் பிரச்னைகள், உறுப்பு தொய்வு என அத்தனைக்கும் கூட இந்த முறையில் தீர்வு காணலாம். எல்லாவற்றிற்கும் மேல் இதற்கெல்லாம் பெரிய அளவில் பணம் செலவாகுமோ என அஞ்ச வேண்டாம். இப்போது பகுதியாக பிரித்துக் கொடுக்கும் முறை துவங்கி நிறைய வசதிகள் உள்ளன. தவிர ரூ.1500ல் இருந்தே சிகிச்சைகள் உள்ளன...’’ என்கிறார் டாக்டர் இளங்கோவன்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்